முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், கேரள அரசின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
சென்னை பனகல் பார்க் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய அவர், அணையின் நீர்மட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டப் பிறகும், அதனை செயல்படுத்த மறுத்து வரும் கேரள அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையில் விளையாடும் கேரளாவுக்கு அரிசி, காய்கறி, இறைச்சி போன்றவற்றை அனுப்புவதை நிறுத்த வேண்டும். கேரளாவில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும்.
நாம் கேரள மக்களை, கேரள அரசை எச்சரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனியும் நீங்கள் பிடிவாதம் பிடித்தால், தண்ணீர் தர மறுத்தால், உங்களுக்கு அரிசி, காய்கறி, இறைச்சி போன்றவை ஒரு நாளும் வந்து சேராது என்று எச்சரிக்கிறோம். அதுமட்டுமல்ல இழந்த தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றை மீட்கக் கூடிய தருணம் வந்துவிட்டது என்று தமிழ் மக்கள் உணருகிறார்கள் என்றார்.

No comments:
Post a Comment