Latest News

வாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்!


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ)

ஒரு ரயில் தன் இலக்கினை நோக்கி நகர்வதிற்கு சக்கரங்கள் தேவைபடுகின்றனவல்லவா? அதேபோன்று ஒரு மனிதன் தன் வழக்கை வெற்றிப் பாதையில் நடை போடுவதிற்கு அடித்தளமாக குறிகோள்கள் தேவைப்படுகின்றன.ஒரு தடகள வீரர் ஒலிம்பிக்கில் 10000

மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்திருக்கலாம், ஆனால் அவன் ஒலிம்பிக்கில் ஓடுவதிற்க்காக எடுத்துக்கொண்ட பயிற்சியும் முயற்சியுமே பிரதானமாகும்.நாம் சிறியவர்களாக இருந்தபோது சைக்கிள் பழகும்போது கீழே விழுந்து கை, கால்களில் அடிபடுகிறது. அதற்காக சைக்கிள் பழகாமல் இருந்து விடுகிறோமா என்ன?

அதேபோன்று தான் ஒரு மனிதன் தனது குறிக்கோளினை நோக்கி பயணம் செய்யும்போது தடைகள் கண்டு மனம் தளராது வீறு நடை போட வேண்டும்.கிராமத்தில் கண்மாய் கரை ஓரத்தில் இருக்கும் ஆல மரத்தினை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் பழத்தில் இருக்கும் சிறு விதை தரையில் விழுந்து பெரிய மரமாகிறது. அதேபோன்று தான் சிறு முயற்சி வெற்றி வாழ்வில் அடித்தளமாக அமையும்.ஒரு மலையின் உச்சியினை அடைய வேண்டுமென்றால் அதனை சுற்றியுள்ள குன்றுகளை பார்த்து பிரமிக்கக் கூடாது. மலை உச்சியினை  அடைந்தே தீருவேன் என்ற மன உறுதி வேண்டும். ஒரு காது கேட்காத மற்று திறனாளிக்கு அவர் மீது பிறர் அள்ளி வீசுகின்ற வசைபாடுகள் மற்றும் கேளிப்பேச்சுகள் அறியாமல் இருப்பதால் தான் அவர் அன்றாட வேலையினை செய்ய முடிகிறது. அவர் காது கேட்கும் திறனிருந்தால் அவர் மீது வீசப்படுகின்ற வசைபடுகளால் ஒடிந்து மூலையில் முடங்கி விடுவார்...


வானத்தில் வட்டமிடும் பறைவைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அவைகள் தங்களுடைய இறகுகளால் எவ்வளவு தூரம் உயரமாகவும் வேகமாகவும்   பறக்க முடியுமோ அதனைப் பொருத்து அது தன் இறைகளை தேடவும் வல்லூருகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் முடியும்.ஆனால் மனிதன் பறப்பதிற்குப் பதிலாக பூமியில் வாழ்கின்றான். அவன் வெற்றிக் கனியினைப் பறிக்க தன் செயல்களில் விரைந்து செயல்பட்டால் வெற்றி இலக்கினை அடைய முடியுமல்லவா?

உங்கள் முயற்சியில் முழுப் பயன் பெற கீழ்க் கண்ட செயல் முறைகள் தேவை:
1) ஒரு கூட்டுக் குடும்பத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை பந்த பாசத்துடன் பழகுவதினை நாம் காணலாம். அதே குடும்பத்தில் இரு சகோதரர்களுக்கிடையே சண்டை வந்து அந்த வீட்டின் நடுவே சுவர் எடுத்தால் அவர்களுக்கிடையேயுள்ள மனக் கசப்பு மேலும் அதிகமாவதுடன், அவர்களுடைய குடும்பதினருக்குள்லேயுள்ள பந்த பந்த பாசமும் அறவே முறிந்து விடும். உதாரணத்திற்கு 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெர்லின் சுவரால் ஜெர்மானிய மக்கள் மேற்கு கிழக்கு எனப் பிரிந்து  வாழ்ந்தனர். பனிப்போர் முடிவுக்கு வந்ததும் அந்த சுவர் இடிக்கப் பட்டதால் இன்று ஒன்று பட்ட ஜெர்மானிய நாடு உலகில் சக்தி வாய்ந்த பெண் ஜனாதிபதியான மார்களினைகொண்டு விளங்குகின்றது. ஆகவே மனிதனின் பந்த பாசத்திற்கு எந்த தடையும் இருக்ககூடாது.

2) உங்கள் வாழ்வு பழமைவாதம், பிற்போக்கு மற்றும் புறையோடியதாக இருக்ககூடாது. புது அனுபவங்கள் மற்றும் புதுமைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.
3) உங்கள் வேலைகளில் அல்லது முயற்சிகளில் உங்கள் குடும்ப உறுப்பினர், சக ஊழியர், வேலையாட்கள் ஆகியோரின் ஒத்துழைப்பினை தேடுங்கள்.

திக்குதெரியாத காட்டில் விடப்பட்ட உங்களுக்கு முயல்கள் பதுங்கும் குழிகள், பதுங்கும் புலிகள், சீரும் பாம்புகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பெரிய யானைகளோ அல்லது உயர்ந்த ஒட்டகசிவிங்கிகளோ கண்ணுக்கு தெரியாமலிருக்க நியாயமில்லை. ஆகவே நீங்கள் எடுத்து வைக்கும் அடிகளை அளந்து வையுங்கள்.உங்களின் அறியாமையிலிருந்து தெளிவு பெற பிறரால் எடுத்துச் சொல்லப்படும் நல்ல அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் வாழ்க்கையின் விபத்திலிருந்து தப்பிக்க முடியும். அதற்கு ஒரு உதாரணமாக 11.9.2011 இல் நீயுயார்க் உலக வர்த்தக மைய விமான தாக்குதல் நேரத்தில் நடந்த ஒரு சம்பவத்தினை சொல்லாலம் என நினைக்கின்றேன். 47 வது வட பகுதியின் தளத்தில் உள்ள பர்ஸ்ட் யூனியன் வங்கியில் வேலை பார்த்த நியூ ஜெர்செயினைச் சார்ந்த 49 வயதான ஜோஸ்  என்பவர் தான் இருந்த கட்டிடத்தினை விமானம் தாக்கியதும் லிப்ட் வேலை செய்யததால் மாடிப் படி வழியே இறங்க ஆரம்பித்தார். தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் சில வேலையாட்கள் வர மறுத்து லிப்ட் இயங்கும் என எதிர் பார்த்து நின்றனர். ஜோசுவுடன் வந்தவர்கள் மாடிபடியே இறங்கி கீழே வருவதற்கும் வர்த்தக மையம் முழுமையாக கீழே விழுவதிற்கும் சரியாக இருந்ததாக அவர் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். இது எதனைக் காட்டுகின்றது என்றால் நல்ல போதனைகளை நாம் ஒருபோதும் நிரகரிகக்கூடாது என்று இந்த சம்பவம் விளக்குகின்றதல்லவா?மனிதன் முன்னேற மனக்கிளர்ச்சி உந்துதல் வேண்டும். அப்போதுதான் ஒரு வெற்றிகரமான செயலை செய்ய முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னாள் ராமேஸ்வரம் தீவாக இருந்தது. அதனை தமிழ்நாட்டுடன் இணைத்து போக்கு வரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைத்ததால்   ஒரு பாம்பன் கடல் பாலம் உருவானது. அதேபோன்று தான் எந்த திட்டமும் செயல் படுத்த மன ஆர்வம் வேண்டும். ஒருவனுடைய வெற்றிபயணம் அவனுக்கு ஏற்படும் எதிர்ப்புகளை நேருக்கு நேர் சந்திப்பதில் அடங்கும். உங்கள் நடை முறைகளை மாற்றினால் உங்கள் எண்ணங்களை மாற்றலாம். எந்த வெற்றியும் ஒருவனுடைய குறிக்கோளின் முடிவாகாது. மாறாக அவனுடைய முயற்சிகளின் அடிகள் தான் முக்கியமாகும். ஜமைகா   ஒலிம்பிக் ஓட்ட வீரர் ஹுசைன் போல்ட் நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் விசில் அடிப்பதிற்கு முன்பே ஓட எத்தநித்ததால் அந்த போட்டியில் ஓடும் தகுதியினை இழந்தார். அனால் தான் இருநூறு மீட்டர் ஓட்டத்தில் வெல்வேன் என்று சபதம் எடுத்து ஓடி வெற்றி பெட்டதோடு மட்டுமல்லாமல் நானூறு மீட்டர் ரிலே ஓட்டபந்தயத்தில் 37.04 வினாடி எடுத்து புதிய சாதனைப் படைத்தார். ஆகவே போல்ட் வெற்றிபெற எடுத்துக் கொண்ட முயற்சியே மேலானது.

உங்களுடைய வெற்றிக்கான முயற்சிகளுக்கு நேரம், காலம் பார்த்து காலவரையின்றி காத்திருக்க வேண்டாம். எண்ணிய உடனே செயலில் இறங்க தயக்கம் காட்டக் கூடாது. உலகில் வெறுப்பு ,  யுத்தம் , சாவு, நோய், பிணி, தனிமை,இழப்பு  இன்னும் பல தடங்கள் நம்மை எதிர் நோக்கும். அவைகளை எதிர் கொள்ளுவதே வெற்றியினைக் கொடுக்கும். ஒரு மல்லிகை செடி வளர்க்க ஆசைப்பட்டு செடி வாங்கி வந்து  தொட்டியில் நட்டு தண்ணீர் ஊற்றிய பின்பு அதனை பராமரிக்காமல் விட்டு விட்டால் அந்த செடி வாடி விடுமல்லவா? அதேபோன்று தான் முயற்சியில் பல சங்கடம் இருக்கின்றது என எண்ணி செயலில் இறங்காமல் வாழா இருக்கக்கூடாது. உலக மிடில் குத்துச் சண்டை வீரர் ரேயிடம் 2001 ஆம் ஆண்டு ஒரு நிருபர், 'எவ்வாறு எதிரி விட்ட அதனை குத்க்களையும் தாங்கினீர்கள்' என்று கேட்டார். அதற்கு ரே சொன்னார், 'பந்து அடிக்க அடிக்கத்தான் மேலே எழும் அதுபோன்று தான் நானும் அடி வாங்கி அடி வாங்கி ரோசப்பட்டு ஆக்ரோசமாக விட்ட குத்தில் எதிரியினை வீழ்த்தினேன்' என்று. அதேபோன்று தான் முயற்சிகளில் ஏற்படும் இடர்ப்பாடுகள் தனக்கு ஏற்படும் முடிவு என எண்ணாமல், அந்த இடர்பாடுகள் தனது வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம் என்று எண்ணி செயலில் இறங்கினால் வாழ்வின் காலச்சக்கரம் சுழல்வது மிகவும் எளிதாகும் என்றால் மிகையாகாது!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.