ஊரை இணைக்கும் கோடுகளே
ஊரைப் பிரிக்கும் கேடுகளானது
வேற்றுமைத் தீயால்
வெந்து மடிகின்றோம்
வாஞ்சை வாளியால்
அன்பு நீரெடுத்து
வாரி அணைப்போம்
சிரட்டை அளவேனும்
சிரத்தை நினைப்போம்...
கூட்டமைப்பு என்னும்
கூடாரம் அமைத்தோம்
ஓட்டுக்காகப் பிளக்கும்
வேட்டமைப்புகளை
வெளியில் நிறுத்துவோம்
உளத்தூய்மைப் பற்றினால்
உருவாகும் ஒற்றுமை
கத்தியில் நட்ப்பது போல்
பத்திரமாகவும்; கண்ணாடிப்
பாத்திரமாகவும் பக்குவமாய்க்
கோத்திரப் பெருமையின்றி
பழகுவோம்
எதிர்மறை எண்ணங்களின்
புதிர்களால் புறம்பேசுவதைப்
புறந்தள்ளுவோம்
அண்டைத் தெருவோடு
அன்பை மறந்தால்
அரவணைக்க ஆளின்றி
அடுத்துவரும் பெருங்கேடு
சமத்துவ மரத்தைச்
சாய்ப்பதற்குச் சாத்தானின் கைகளில்
சுயநலக் கோடாரி
சந்தித்துச் சொல்வோம்
சகோதரர்களின் வீடேறி
”எல்லா வீதிகளும் ஒன்றே”
இனியொரு விதி செய்வோம் நன்றே
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
13வது வார்டு வாக்களா பெருமக்களை இவருக்கா உங்கள் ஓட்டு!
ReplyDeletehttp://adiraivoice.blogspot.com/2011/10/13.html
சம்சுல் இஸ்லாம் சங்க முகல்லா வாசிகளை இவர்களுக்கா உங்கள் ஒட்டு!
ReplyDeletehttp://adiraivoice.blogspot.com/2011/10/blog-post_09.html