சமச்சீர் கல்வியின் பாடப் புத்தகங்கள் வயதுக்குத் தக்கவாறு அமைக்கப்படவில்லை என்று சமச்சீர் கல்வி ஆய்வு நிபுணர்குழு தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத உத்தரவுப்படி தமிழக அரசு அமைத்த நிபுணர்குழு செவ்வாய்க்கிழமையன்று அறிக்கை தாக்கல் செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில் பாடத்திட்டம், பாடப்புத்தகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் விளக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய விவரங்கள் வருமாறு:
பாடத்திட்டத்தில் உள்ள பொருளடக்கம் குழந்தைகளின் வயதுக்கு தகுந்தார் போல் இல்லை. இதனால், பாடத்திட்டம் சில வகுப்புகளுக்கு சுமையாகவும் மற்ற வகுப்புகளுக்கு எளிதாகவும் இருக்கிறது. அறிவியல் பாடங்களை உருவாக்கும்போது குழந்தைகளின் யோசிக்கும் திறன், புரிந்து கொள்ளும் சக்தி ஆகியவை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
பாடத்தின் முக்கிய கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வெறுமனே கோட்பாடுகளைச் சுற்றியே பாடத்திட்டம் அமைந்துள்ளது. இது, மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பதை தடுக்கும். பாடத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தாது.
சமச்சீர் கல்வி பாடத்திட்டம், தேசிய கல்வித் திட்டம் 2005-ன் விதிமுறைகளின்படி உருவாக்கப்படவில்லை. ஆகவே, இந்த பாடத்திட்டம் குழந்தைகளுக்கு அதிக சுமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உற்சாகமாக கல்வி கற்பதற்கும் பயன்படாது.
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ளும் திறன், வாழும் திறன் பற்றிய தகவல்கள் இல்லை. இன்றைய உலகில் குழந்தைகள் தங்களது இளம் பருவத்திலேயே வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இன்றைய உலகில் முக்கியமாக கருதப்படும் பகுப்பாயும் திறன் இந்தப் பாடத்திட்டத்தில் இல்லை. பாடத்தைத் தாண்டி, பகுப்பாய்வு திறனை வளர்க்கும் விஷயங்கள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு பகுப்பாய்வும் சிந்தனை இல்லாவிட்டால், ஒரு மாணவன் தான் படித்த விஷயங்களை, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியாது.
அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மெட்ரிக் தரத்திற்கு உயர்வதற்காக அவர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுக்காமல், தரமான கல்வி அளிப்பதாகக் கூறி பாடத்திட்டத்தை ஒரேயடியாக உயர்த்தி இருக்கிறார்கள். இப்படி செய்திருப்பது மாணவர்களுக்கு சுமையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
ஒரு வகுப்பில் படிப்பை முடித்து மேல் வகுப்பிற்கு எளிதாக செல்லும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படவில்லை. கோட்பாடுகள் விஷயத்தில் ஒரு பாடத்திற்கும் அடுத்த பாடத்திற்கும் தொடர்பு இல்லாமல் இருக்கிறது.
பாடங்களுக்கிடையே தொடர்பு இல்லாததால், மாணவர்கள் மனப்பாடம் செய்வதற்கு மட்டுமே இது பயன்படும். தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறாது.
ஒவ்வொரு பாடத்தையும் தனித்தனி பிரிவாக, தவறாக கருதி பாடத்திட்டத்தை அமைத்திருக்கிறார்கள். பாடங்களின் கோட்பாடுகளை மாணவர்கள் புரிந்து கொள்வதற்கு இது எப்படி உதவிகரமாக இருக்கும்.
மேற்கண்ட காரணங்களால், நல்ல பாடத்திட்டம் தயாரிப்பதற்கு தேவையான விஷயங்களை கருத்தில் கொள்ளாமல், சமச்சீர் கல்வி முறைக்கான பாடத்திட்டம், குறுகிய காலத்தில் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டு உள்ளது என்று குழு உறுதியாக கருதுகிறது. வயதுக்கு ஏற்ற படிப்பு, தொடர்புடைய பாடங்கள், நடைமுறை கல்வி ஆகியவை சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
தமிழக மாணவ, மாணவிகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தேவையான பாடத்திட்டமோ, கூடுதல் புத்தக வசாசிப்பு திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்போ சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் இல்லை. அதனால் தேசிய கல்வி திட்டம் 2005, மத்திய சட்டம் மற்றும் மாணவர்களின் வாழ்வில் திறன், செய்முறை திறன், பகுப்பாயும் திறன் ஆகியவற்றின் தேவை அடிப்படையிலும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று குழு உறுதியாக கருதுகிறது.
சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களிலும் பல குறைபாடுகள் உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் தகவல்களைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. இதன் விளைவாக, மாணவர்கள் பாடங்களை குருட்டு மனப்பாடம் செய்வார்களே தவிர, புரிந்து படிக்கமாட்டார்கள்.
தொடக்கக் கல்வியில், தேவைக்கு அதிகமான பாடங்கள் உள்ளன. முதலாவது மற்றும் இரண்டாம் வகுப்புகளில் மொழிப் பாடம், கணிதம் மட்டுமே நடத்த வேண்டும் என்றும், 3, 4 மற்றும் 5ஆம் வகுப்புகளில் மேற்கண்ட பாடங்களுடன் கூடுதலாக சுற்றுச்சூழல் அறிவியல் பாடம் இருக்க வேண்டும் என்று தேசிய கல்வி திட்டம் பரிந்துரைத்துள்ளது. இதற்கு முரணாக, சமச்சீர் கல்வியில் முதலாவது மற்றும் இரண்டாம் வகுப்புகளில் 4 பாடங்கள் உள்ளன. 3, 4 மற்றும் 5ஆம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் இருக்கின்றன. இது, இளம் வயது குழந்தைகளுக்கு கண்டிப்பாக அதிக சுமையை ஏற்படுத்தும்.
பாடங்களில் ஏராளமான கருத்துப் பிழைகள் இருக்கின்றன. இதனால் பாடத்தை மாணவர்கள் சரியாக புரிந்து கொள்ள முடியாது. அதனால் அவர்கள் மனதில் குழப்பம் ஏற்படும்.
சமச்சீர் கல்வி பாடங்களில் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லை. பல்வேறு பாடங்களுக்கு இடையிலான தொடர்புகளை புரிந்து கொள்ளும் சக்தி உள்ள மாணவர்களால் மட்டுமே இந்த பாடங்களை படிக்க முடியும்.
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடம் பெரும் சுமையாக இருக்கும். உண்மையிலேயே, போதிய உதாரணங்களுடன் விளக்காவிட்டால், சமச்சீர் கல்வி பாடங்களை கிராமப்புற மாணவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
வாழ்வியல் திறன், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன், பேச்சு திறன், தகவல் தொடர்பு திறன் உள்ளிட்ட திறன்கள் தொடர்பான சமச்சீர் கல்வி பாடத்தில் எந்த குறிப்புகளும் இல்லை. இத்தகைய திறன்களை குழந்தைகள் இளம் வயதில் பெற்றால்தான், எதிர்காலத்தில் அவர்களால் சவால்களை சந்திக்க முடியும்.
பாடப்புத்தகங்கள் மாணவர்களின் சிந்தனை திறனை தூண்டும் வகையில் உருவாக்கப்படவில்லை. மாணவர்கள் பாடத்தை புரிந்திருக்கிறார்களா என்பதை சோதிக்கும் வகையில் பாடப்புத்தகத்தில் செய்முறை பயிற்சியோ, இதர செயல்பாடுகளோ இல்லை. மாணவர்கள் பாடத்தை ஆழ்ந்து படிக்கவோ, மனதை செலுத்தி படிக்கவோ, பகுப்பாயும் திறனுடன் படிக்கவோ முடியாது. இதனால் அவர்கள் மனதில் புதிய சிந்தனைகள், கருத்துகள் உருவாவது தடுக்கப்படும்.
சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில், பாடங்கள் முறையாக மொழி பெயர்ப்பு செய்யப்படவில்லை. இதனால் கருத்துகளை புரிந்து கொள்வதில் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படும்.
ஆங்கில வழி பாடப்புத்தகங்கள், தமிழ் பாடத்தை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து உருவாக்கப்பட்டு உள்ளது. அதனால் ஏறக்குறைய அனைத்து வகுப்புகளின் எல்லா பாடங்களிலும் இலக்கணப் பிழைகள், வாக்கியப் பிழைகள் காணப்படுகின்றன. இதுபோன்ற தரம் குறைந்த பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவது மன்னிக்க முடியாதது.
புத்தகத்தில் ஆட்சேபணைக்குரிய விவரங்கள் இடம்பெறக்கூடாது. ஆனால், சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் சில இடங்களில் தேவையில்லாத, ஆட்சேபணைக்குரிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.
பழைய பாடப்புத்தகங்களோடு ஒப்பிடும்போது, சமச்சீர் கல்வி புத்தகங்கள் கனமானவை. இதனால் மாணவர்களுக்கு சுமையை அதிகப்படுத்தும். இது, புத்தக சுமையில்லாத கல்வி என்ற தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.
சமச்சீர் கல்வி புத்தகத்தில் ஆசிரியர்களுக்கு பாடக் குறிப்புகள் இல்லை. அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படாததால், பாடங்களில் உள்ள விஷயங்களை மாணவர்களுக்கு தெளிவாக கற்றுத்தர முடியாது.
இவ்வாறு நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

No comments:
Post a Comment