அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 10ஆவது வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நாளை முதல் ஒரு வாரம் யோகா கல்வி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் தண்.வசுந்தராதேவி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாணவச்செல்வங்கள் சிறப்புடன் கல்வி கற்று மனநலம், உடல்நலம் பெற்று கல்வி அறிவுடனும், கவின்மிகு ஆற்றலுடனும் செயல்பட சிறப்புமுகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
யோகாசன கல்வி முகாம் 8-7-2011 முதல் 14-ஆம் தேதி வரை ஒருவாரம் அளிக்கவேண்டும். 6 முதல் 10-ஆவது வகுப்புவரை அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 19-ஆம்தேதி மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும். 27-ஆம் தேதி இயன்முறை மருத்துவ முகாம் (பிசியோதெரபி) நடத்தப்படவேண்டும்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குவது உடல். உடல் ஆரோக்கியமாக இருக்க, உள்ளம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். உடல் உள்ளம் மற்றும் ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைத்து செம்மையாக செயல்பட வைக்க வேண்டும். எத்தனையோ மாறுபட்ட குடும்ப சூழ்நிலையில் இருந்து வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளங்களை ஒருங்கிணைத்து ஒற்றுமையுடன் செயல்படுவதில் யோகக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் நாளை முதல் 14-ஆம் தேதி வரை தினமும் 1 மணிநேரம் தங்கள் பள்ளியில் உள்ள 6 முதல் 10ஆவது வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு யோகாசன கல்வி முகாம் நடத்துவதற்கு முதன்மை கல்வி அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 19ஆம் தேதி அன்று மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தவேண்டும். அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்களை நேரில் அணுகி மருத்துவ பரிசோதனை நடத்திட உரிய ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் செய்யவேண்டும். சுகாதார இணை இயக்குனரை முதன்மை கல்வி அதிகாரி சந்தித்து மருத்துவ முகாம் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் .
இயன்முறை மருத்துவ திட்ட வல்லுனர்களிடம் கலந்து பேசி இயன்முறை மருத்துவம் அளிக்கச்செய்யவேண்டும். அளிக்கவேண்டிய மாணவ-மாணவியர் யார் என்று அறிந்து அவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் முகாமுக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யவேண்டும்.

இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பதை பள்ளிக்கல்வி இயக்குனருக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்கவேண்டும்.
இவ்வாறு வசுந்தராதேவி செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Thanks www.inneram.com
No comments:
Post a Comment