Latest News

திமுகவினர் உத்தமர் போல் பேசிக் கொண்டுள்ளனர்: இளங்கோவன்!

தோல்விக்கான காரணம் என்ன என்பதை சிந்திக்காமல் திமுகவினர் உத்தமர் போல் பேசிக் கொண்டுள்ளனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் .வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்கரபாணி ரெட்டியார் தலைமையில் தாம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் .வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
கூடா நட்பு என்று நாங்கள் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்லி கொண்டிருக்கிறீர்கள். 4 மாநில தேர்தல் தமிழகத்தோடு சேர்ந்து நடந்தது 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது மக்கள் காங்கிரஸ் மீது கொண்ட நம்பிக்கையால் தான். தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றது உங்களோடு நாங்கள் இருந்த காரணத்தால்தான். திமுகவுடன் இருந்தால் தோற்று விடுவோம் என்று நான் ஒன்றரை ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.
இன்னும் அதிகமான தொகுதிகளில் 1980ஆம் ஆண்டில் போட்டியிட்டது போல 110 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி வரும் என்று மக்கள் எங்களுக்கு வாக்களித்திருப்பார்கள்.   தோற்று விடுவோம் என்பது எங்களுக்கு தெரியும்.பாராளுமன்றத்தை காக்க தோற்போம் என தெரிந்தே தமிழக காங்கிரஸ் கட்சியினர் தியாகிகளாக மாறி தி.மு..வோடு நின்றோம்.
தோல்விக்கு பிறகு திமுகவினர் மக்கள் எதற்காக தோற்கடித்தார்கள் என்பதை பற்றி சிந்திக்காமல் உத்தமர் போல பேசிக் கொண்டிருந்தால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். திகார் சிறையிலே ஒரு பெண் இருக்கிறார். அந்தப் பெண்ணை பார்க்க வந்த அவருடைய தகப்பனார் ரோஜாப்பூ போல இருந்த என் மகள் கருகி விட்டார். உடம்பிலே கொப்பளங்கள் வந்து விட்டது என்கிறார்.
சுகவாசததை அனுபவிக்கவா சிறைக்குச் செல்கிறார்கள். சுதந்திரப் போராட்ட தியாகி போல ஜெயிலுக்கு சென்றது போல வர்ணிக்கிறாரே. இது என்ன நியாயம். வீட்டில் ஆயிரம் மதிப்புள்ள சிறிய தங்க நகையை வேலைக்கார பெண் திருடினாலே போலீசில் புகார் செய்து தண்டனை பெற்று தருகிறோம். ஆயிரக் கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்கள் சிரமம் பார்க்காமல் சிறையில் இருக்க வேண்டியதுதான். ஊரில் இருக்கிற ரவுடிகளும், காவல்துறையும் தன் பக்கம் இருந்தால் பயந்தாங்கொள்ளி கூட மாவீரனாக முடியும்.
நான் ஒரு ஆளை அடிப்பேன் என்னை போலீஸ் கைது செய்யாது என்றால் நான் கூட மாவீரனாக முடியும். இப்போது ஜெயலலிதா ஆட்சி செய்கிறார். இனி உன் வீரத்தை மதுரையில் காட்டேன். அன்புச் சகோதரா, மாவீரன் என்று சொன்னார்களே அந்த மாவீரத்தை நாங்களும் பார்ப்போம் அல்லவா? நீங்கள் இப்போது காட்டுங்கள் உங்கள் வீரத்தை. போடுகிறோம் நாங்களும் உங்களுக்கு தாளத்தை.
மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற சொல்லி தானே 5 ஆண்டுகளுக்கு முன்பு பதவியில் உங்களை அமர வைத்தார்கள்.ஆனால் நீங்கள் அதை செய்யாமல் ஊரையே வாங்க வேண்டும் என நினைத்தீர்கள். பிறகு மாநிலத்தையே வாங்க வேண்டும் என நினைத்தீர்கள் பிறகு இந்தியாவையே உன்னுடைய விலை என்ன கேட்க வேண்டிய ஆசையும் உங்களுக்கு வந்து விட்டது.
டெல்லியை உங்களால் வாங்க முடியவில்லைஜெயலலிதா ஆட்சியின் ஆரம்பம் நன்றாக உள்ளது.தலைமைசெயலகம் பழைய இடத்தில் செயல்படும் என்று சொன்னபோது அவர் இன்னும் மாறவில்லை என நினைத்தேன். டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் அளித்த விளக்கத்திற்கு பிறகு அவர் முடிவை நான் ஏற்றுக்கொண்டேன்.
கட்டிடம் கட்டும் பணி முடிவடையும் முன்னரே செட் போட்டு திறந்து 36 அரசு துறைகளில் 6 மட்டுமே அங்க செயல்படும் நிலையில் அந்த கட்டிடம் உள்ளது. அண்ணா ஆட்சி பொறுப்பேற்ற போது பெருந்தலைவர் காமராஜர் 6 மாத காலம் இவர்கள் எப்படி ஆள்கிறார்கள் என்று பார்ப்போம் அது வரை யாரும் பேசக்கூடாது என்றார். அதுதான் அரசியல் நாகரீகம்.
புதவி ஏற்ற உடனேயே எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் குற்றம் சொன்னால் என்ன நியாயம் என்று நான் கேட்கிறேன்.   நான் யாருக்காகவும் வக்காலத்து வாங்கவில்லை.என்னைப்பொறுத்தவரை தவறுகள் எங்குநடந்தாலும் சுட்டிகாட்ட தயங்க மாட்டேன் விளைவுகளைப் பற்றியும் கவலைப்படமாட்டேன்.அதே சமயத்தில் நல்ல காரியம் நடக்கும்போது அதை வரவேற்பதும் நமது கடமை.
நில அபகரிப்பில் பொய் வழக்குகள் போடுவதாக மு..ஸ்டாலின் பேசுகிறார். மாதவரத்தில் 250 ஆண்டுகளாக செங்கல் சூளை நடத்தி வந்தவருடைய இடம் ஒரே இரவில் போலீஸ் துணையுடன் மீட்கப்ட்டது. இன்னும் எத்தனையோ இது போன்று உள்ளது.
லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க வேண்டும் என இங்கிருந்து டெல்லிக்கு சென்று தி.மு..வினர் அனைத்து கட்சி கூட்டத்தில் கூறினார்கள. கரைபடாத கைகளுக்கு சொந்தகாரர் பிரதமர் மன்மோகன்சிங். அவரை லோக்பாலில் சேர்ப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் லஞ்சம் வாங்கிய முன்னாள் முதல்வர்களையும் இதில் சேர்க்க வேண்டும் என நான் கோரிக்கை வைக்கிறேன்.
காங்கிரஸ் மிகப்பெரிய தோல்விக்கு பின்னும் எழுந்து நிற்கும். ஆனால் மற்றவர்களை பற்றி சொல்ல முடியாது. மற்ற கட்சியை பொறுத்தவரை அவர்களுக்கு கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு விட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் எதிர்கட்சி கூட இல்லை என்ற நிலையை எதிர்காலத்தில் காங்கிரால் மட்டுமே செய்ய முடியும்.மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்போது தமிழகததை ஆளும் கட்சியாக காங்கிரஸ் வரும்.
இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.