பாட்னா : ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரம்பிற்குள், பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட வரைவு மசோதா, பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, இ.கம்யூ., பொதுச் செயலர் பரதன், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்ய உள்ள லோக்பால் மசோதா பயனுள்ளதாகவும், வலுவானதாகவும் இருக்க வேண்டும். லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டுவர வேண்டும். நீதிபதிகளின் நடத்தையை கண்காணிக்க, தேசிய நீதித்துறை கமிஷனில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும்.
லோக்பால் மசோதாவை, இரு அவைகளிலும் தாக்கல் செய்வதற்கு முன், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து, அதன் மீது விவாதம் நடத்திய பின்னரே தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு பரதன் கூறினார்.
No comments:
Post a Comment