Latest News

சாதிக் பாட்சா மர்ம மரணம்! விடை தெரியா கேள்விகள்!

2G ஒதுக்கீட்டில் அரசுக்கு  வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ யால் கைது  செய்யப் பட்டு திகார் சிறையில் அடைக்கப் பட்டு இருக்கும் முன்னாள் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா. சைக்கிள் மூலம் துணி வியாபாரம் செய்து வந்த சாதிக் பாட்சா மெதுவாக ரியல் எஸ்டேட் தொழிலில் கால் பதிக்க ஆரம்பித்தார்.  கடந்த 2004 ல் கிரீன் ஹவுஸ் புரமொட்டர்ஸ் என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கிய சாதிக் பாட்சா பல்வேறு ஊர்களிலும் அதன் கிளைகளைத் தொடங்கினார்.

2007 ம் வருடம்  ராசா தகவல் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவியேற்ற போது சிங்கப்பூரிலும் கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் கிளை தொடங்கப் பட்டது. ராசாவின் மனைவி பரமேஸ்வரி கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து பின்னர் விலகியுள்ளார். 2G ஊழல் வழக்கை  விசாரித்து வரும் சி.பி.ஐ கடந்த டிசம்பர் மாதம் 8 ம் தேதி அன்று சாதிக் பாட்சாவின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தியது. சாதிக் பாட்சாவிடமும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில் மார்ச் 16 அன்று தேனாம்பேட்டையில் உள்ள தன் இல்லத்தில் வைத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் சாதிக் பாட்சா.

சாதிக் பாட்சாவின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது  தெஹல்கா இணைய தளம். இறந்தது சாதிக் பாட்சா தான் என்றும் உடல்  சாதிக் பாட்சாவின் உடல்தான் என்றும் சென்னை காவல்துறை இது வரை உறுதிப் படுத்த வில்லை என்றும் சாதிக் பாட்சாவின் உடலை காவல்துறையினர் புகைப் படம் எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. ...

சென்னை காவல்துறை ஆணையர் டி.ராஜேந்திரன் ஊடகங்களிடம் தெரிவிக்கையில் சாதிக் பாட்சாவின் உடலை தான் பார்க்க வில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் எந்த காவல்துறை அதிகாரிகளும் சாதிக் பாட்சாவின் உடலை பார்க்க வில்லை என்று காவல்துறை தெரிவித்ததாகவும் தெஹல்கா இணைய தளம் தெரிவித்துள்ளது. மேலும் சாதிக் பாட்சாவின் மனைவி ரெஹானா பானுவின் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே காவல்துறையினர் இறந்தது சாதிக் பாட்சா தான் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

பகல் 12 .45 மணிக்கு சாதிக் பாட்சாவின் அரைக் கதவை தட்டிய அவரது மனைவி ரெஹானா பானு டிரைவரை அழைத்து உடலை இறக்கி அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் சாதிக் பாட்சாவின் உயிர் கொண்டு வருவதற்கு முன்பே பிரிந்து விட்டதாகக் கூறவே சாதிக் பாட்சாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது. சாதிக் பாட்சாவின் உடல் கண்டெடுக்கப் பட்டு சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு மாலை 5.15 மணி அளவிலேயே எப்.ஐ.ஆர் பதிவு செய்யப் பட்டுள்ளது.

சாதிக் பாட்சாவின் வீட்டில் இருந்து 5 நிமிட பயணத் தொலைவில் அமைந்து இருக்கும் காவல் நிலையத்துக்கு  2 மணி அளவில் தொலைபேசி அழைப்பில் சாதிக் பாட்சா இறந்து விட்டதாக யாரோ தகவல் தெரிவித்துள்ளதாகவும் காவல்துறை சாதிக் பாட்சாவின் வீட்டை சீல் வைக்கவும் தடயங்களை கைப்பற்றவும் முயற்சிக்க வில்லை என்றும் தெஹல்கா இணைய தளம் தெரிவித்துள்ளது.

பிரேதப் பரிசோதனை செய்த ராயப் பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் டேக்கால் கூறுகையில் சாதிக் பாட்சா மூச்சுத் திணறி இறந்துள்ளதாகவும் கழுத்து இறுக்கப் பட்ட தடயங்கள் இருப்பதாகவும் இவ்வாறான அடையாளங்கள் இறந்த பின் இரு மணி நேரம் கழித்து கழுத்து இறுக்கப் பட்டாலும் காணப் படும்  என்றும் அதை ஆராய கழுத்துப் பகுதி தோள் ஆய்வுக்கு அனுப்ப பட்டு இருப்பதாகவும் அந்த முடிவு வந்த பிறகே உறுதியாகச் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளதாகவும் மேலும் சாதிக் பாட்சாவின் உடல் தங்களிடம் ஒப்படைக்கப் படும்  போது எந்த துணியும் இல்லை என்றும் வெள்ளை சீட் கொண்டு மூடப் பட்டு இருந்ததாகவும் டேக்கால் தெரிவித்ததாக தெஹல்கா இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 16 அன்று சாதிக் பாட்சா சி.பி.ஐ விசாரணைக்காக டெல்லி செல்ல விமானத்தில் டிக்கட் முன்பதிவு செய்து இருந்ததாக  கூறப் படும் நிலையில் மார்ச் 16 அன்று மதிய நேரத்தில் டெல்லி செல்லும் ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் சாதிக் பாட்சா என்ற பெயரில் எந்த டிக்கெட்டும் முன்பதிவு செய்யப் பட வில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத ஏர்வேஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்த இணைய தளம் மேலும் தெரிவித்துள்ளது.

சாதிக் பாட்சா பகல்  12 .45 க்கு தற்கொலை செய்ததாகக் கூறப் படும் நிலையில் சாதிக் பாட்சா எழுதி வைத்த கடிதம் சுமார் 7 மணி நேரத்துக்குப் பிறகு கண்டெடுக்கப் பட்டதாக சாதிக் பாட்சாவின் உறவினர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த கடிதம் சாதிக் பாட்சாவின் உடல் அருகே கண்டெடுக்கப் படாமல் வீட்டில் இருந்ததாக தெரிவித்துள்ளனர் சாதிக்பாட்சா உறவினர்கள். அந்த கடிதம் மார்ச் 15 அன்று எழுதப் பட்டு இருப்பதும் சாதிக் பாட்சா 16 அன்று தற்கொலை செய்து இருப்பதும்  மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளது.

சாதிக் பாட்சாவின் மனைவி ரெஹானா பானு சி.பி.ஐ யின் விசாரணையால் மன உளைச்சலுக்கு ஆளானதால் தன் கணவர் தற்கொலை செய்து கொண்டதாகக்  கூறிய நிலையில் சாதிக் பாட்சாவின் கடிதமும் மனைவி ரெஹானா பானுவின் கூற்றை அப்படியே பிரதிபலித்தது.

சாதிக் பாட்சாவின் தற்கொலை வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப் பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ புலன் விசாரணை செய்து உண்மைகளை வெளிக் கொண்டு வருமா அல்லது ஆருஷி கொலை வழக்கை மூட முயற்சித்தது போல்  மூடி விடுமா என்பது போகப் போகத் தான் தெரியும்.

நன்றி : இந்நேரம் .காம்

தகவல் : அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.