Latest News

அடுத்தது என்ன., தமிழக அரசியல் களம் மாறுகிறது: அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை

சென்னை: தமிழக தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி சர்ச்சைகள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த தேர்தலில் இருமுனை போட்டி என்ற நிலை தற்போது மாறி முமுனை போட்டி நடைமுறைக்கு வந்து விடுமோ என்ற யூகத்தின் நிலைக்கு அரசியல் காட்சிகள் மாறி வருகின்றன.
தி.மு.க., கூட்டணி நிலை: கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தி.மு.க., காங்கிரஸ் கட்சி கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுவோம் என தி.மு.,க ., உயர்நிலை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு வழியாக சமரசம் ஏற்பட்டு கூட்டணி இறுதியானது. தற்போது தி.மு.க,. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தை, இந்திய யூனியன் முஸ்லிம்லீக்,. கொங்கு நாடு முன்னேற்ற கழகம், முவேந்தர் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு உரிய தொகுதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன...
நீண்ட கால நண்பர் ம.தி.மு.க.,வை கைவிட்டது : அ.தி.மு.க, அணியில் நீண்ட கால நண்பராக இருந்து வரும் ம.தி.மு.க.,.வுக்கு தொகுதி ஒதுக்குவதில் அ.தி.மு.க., அக்கறை காட்டவில்லை. இது வரை கவுரவ பேச்சுக்கு கூட அ.தி.மு.க, அழைக்கவில்‌லை. இது பெற்ற குழந்தையை விஷம் வைத்து ‌கொல்வதற்கு சமம் என இக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். புதிதாக சேர்ந்த தே.மு.தி.க., வுக்கு 41 தொகுதிகள் ஓதுக்கப்பட்டன. தேசிய கட்சிகளான இடதுசாரிகள் அ.தி.மு.க., பேச்சுவார்த்தைக்கு எப்போது அழைக்கும் என காத்திருந்தன. நீண்ட இழுபறிக்கு பின்னர் மார்க்., கம்யூ., கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூ., கட்சிக்கு 10 இடங்களும் ஒதுக்கப்பட்டன. இது மிக குறைவுதான் என்று அதிருப்தியில் இருந்தாலும் அ.தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுவோம் என அறிவித்தன. 45 நாட்களாக பேச்சு வார்த்தைக்கு அ.தி.மு.க., அழைக்கும் என எதிர்பாத்து பொறுமையாக இருந்த நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி இந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
தொகுதியை தன்னி‌ச்சையாக அறிவிப்பதா ? இதற்கிடையில் நேற்று அ.தி.மு.,க தனது 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. இது கூட்டணி கட்சிகள் இடையே இப்போது பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் தே.மு.தி.க., இடதுசாரிகள், பார்வர்டுபிளாக் கட்சிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்ட தொகுதிகள் அடங்கும். கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்தது அதிர்ச்சி தருவதாக மார்க்., கம்யூ., வெளிப்படையாக அறிவித்தது. சரத்குமார் தலைமையிலான சமத்துவமக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் அதிருப்பதியில் இருக்கின்றன. இது தொடர்பாக அடுத்து என்ன செய்வது என இடதுசாரிகள் இன்று காலை அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. தே.மு.தி.க., வும், இன்று கட்சி உயர் நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.இந்த கூட்டத்தில் அடுத்து என்ன செய்வது என ஆலோசிக்கப்படுகிறது.
ஒரணியில் அணிதிரள வாய்ப்பு : அ.தி.மு.க, கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தே.மு.தி.க., ம.தி.மு.க.,.இடதுசாரிகள் இந்த கட்சிகள் ஒரணியில் திரண்டு 3 வது அணியை அமைக்க யோசிப்பதாக தெரிகிறது. இப்படி முடிவு எடுக்கும் பட்சத்தில் தமிழக தேர்தலில் மும்முனை போட்டி உருவாகும். அ.தி.மு.க., தனித்து விடப்படும் ?

தகவல் : அதிரை அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.