Latest News

ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் வாய்ஸ் சாட்என்ற பெயரில் மனம் விட்டு பேசலாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வருடமாக வாடிக்கையாக இருந்து வருகிறது.

கோவையில் பெரும்பாலான செல்போன் உபயோகிப்பவர்களுக்கு இதுபோன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத்தொடங்கியது. "நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச, உங்களுடைய லைப் ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக மாற கால் பண்ணுங்க. பல்லவி, சுமா, மாலதி ஆகியோர் உங்கள் போனுக்கு காத்திருக்கிறார்கள்." இப்படி தான் அந்த எஸ்.எம்.எஸ்.சில் கூறப்பட்டிருந்தது...



சில நேரங்களில் இது போன்ற குறுந்தகவல்கள் திருமணமானவர்களின் வீடுகளில் வீண் பிரச்சினைகளைக் கூட உருவாக்கியது. இதனால் ஏராளமானவர்கள் கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தனர்.

அவரது உத்தரவின் பேரில் கோவை சைபர் செல் போலீசார் சம்பந்தப்பட்ட எஸ்.எம்.எஸ். குறித்து தகவலறிய களமிறங்கினர். முதற்கட்ட விசாரணையில் வெளி நாட்டில் இருந்து இந்த செல்போன்களில் பெண்கள் பேசுவது போல இருந்தது. இதனால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆங்கில செய்தி தாளில் "டெலி காலர் தேவை" என்று கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த தனியார் கால் சென்டர் சார்பில் விளம்பரம் ஒன்று செய்யப்பட்டிருந்தது போலீசாரின் பார்வையில் விழுந்தது.

அதனை ரகசியமாக கண்காணித்த சைபர் செல் போலீசார் அந்தப் பணிக்கான நேர்முக தேர்வுக்குச் சென்று வந்த பெண்கள் மூலம் சில தகவல்களைப் பெற்றனர். இதில் மனம் விட்டு பேசலாம் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி ஆண்களுடன் பெண்களை ஆபாசமாக பேச வைத்து அவர்களைத் தவறான வழிக்குக் கூட்டி செல்லும் நிறுவனம் அது என்பது தெரிய வந்தது.

உடனடியாக சைபர் செல் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி அந்நிறுவனத்திலிருந்து முக்கிய ஆவணங்களைப் பறி முதல் செய்தனர். கணவன்-மனைவி என 2 பேர் சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்துவது தெரிய வந்தது. ஆண்களிடம் செக்சியாக, ஆபாசமாக பேசுவதற்கு மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஒரு நாளைக்குத் தொடர்ந்து 8 மணி நேரம் செல்போனில் ஆண்களுடன் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி வலையில் வீழ்த்தி ஆபாசமாக பேசி ஆண்களின் மனதைக் கெடுத்து உள்ளனர்.

இத்தகைய குறுந்தகவலால் ஏராளமான குடும்பங்களில் பிரச்சினை வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆபாச சாட் கால் சென்டரின் உரிமையாளர்களான கணவன்- மனைவியிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் : அதிரை அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.