என். ராமதுரை
கொடுங்கோல் ஆட்சி நடத்தும் மன்னர்களைப் பார்த்து அந்த நாள்களில் முனிவர்கள், ""உன் நாட்டில் கல் மாரி மண் மாரி பெய்யட்டும்'' என்று சாபமிடுவார்களாம். அவ்வித சாபம் பலித்திருக்குமா என்பது சந்தேகமே. ஆனால், பூமியில் பன்னெடுங்காலமாகவே அங்குமிங்குமாக வானிலிருந்து கற்கள் வந்து விழுந்தவண்ணம் உள்ளன. இவை விண்கற்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இப்படியான ஒரு கல் உங்கள் வீட்டருகேகூட வந்து விழலாம்.
அமெரிக்காவில் 1954-ம் ஆண்டில் 4 கிலோ எடைகொண்ட ஒரு விண்கல் மரப் பலகையால் ஆன கூரையைப் பொத்துக்கொண்டு ஒரு வீட்டுக்குள் வந்து விழுந்தது.
ஒரு விண்கல் தரையில் வந்து விழுந்த பின்னர், அது விண்ணிலிருந்து வந்து விழுந்ததாகும் என ஒருவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அது கல்லோடு கல்லாகக் கிடக்குமானால் இது விஷயத்தில் பயிற்சி பெற்ற அல்லது நீண்டகால அனுபவம் கொண்ட ஒருவரால்தான் கண்டுபிடிக்க முடியும். எனினும், பாலைவனப்பகுதி, நிரந்தரமாகப் பனிக்கட்டியால் மூடப்பட்ட அண்டார்டிக் பகுதி ஆகியவற்றில் பெரிய அளவிலான விண்கல் வந்து விழுமேயானால் அந்த விண்கல்லை எளிதில் அடையாளம் கண்டு சேகரித்து விடலாம். ...
விண்கற்கள் அரிய பொருள்களே. ஆகவேதான் அவை அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகின்றன.
தனிப்பட்ட முறையில் விண்கற்களைச் சேகரிப்பவர்களும் உள்ளனர். சேகரிப்பாளர்கள் உள்ளனர் என்பதால் விண்கற்களை விற்பதும், வாங்குவதும் சர்வதேச அளவில் நடைபெற்று வருகின்றன. சுமார் 500 கிராம் கொண்ட விண்கல் ஒன்றின் விலை 1000 டாலர் (ரூ.46,000 ) வரை இருக்கலாம். மூன்று கிலோ எடை கொண்ட விண்கல் ஒன்றின் விலை சுமார் 4,500 டாலர்.
அண்மையில் சென்னை அருங்காட்சியகத்திலிருந்து ஐந்து விண்கற்கள் திருட்டுப்போயின. இவை நல்ல விலை மதிப்புக் கொண்டவை என்று அறிந்தவர்கள்தான், இவற்றைத் திருடிச் சென்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
விண்கல்லின் பெயரில் கல் என்ற சொல் அடங்கியிருந்தாலும் உண்மையில் அது வெறும் கல் அல்ல. எந்த விண்கல்லாக இருந்தாலும் அதில் ஓரளவு உலோகங்கள் இருக்கும். விண்கற்களை இரும்பு அதிகம் கொண்ட விண்கல், இரும்பு குறைவான விண்கல் என இரு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை விண்கல்லில் இரும்பு 90 சதவிகிதம், நிக்கல் சுமார் 8 சதவிகிதம், கோபால்ட் 0.63 சதவிகிதம் இருக்கும். வேறு சில உலோகங்கள் அற்ப அளவில் இருக்கலாம்.
இரண்டாவது வகை விண்கல்லில் இரும்பு 88 சதவிகிதம், நிக்கல் 10 சதவிகிதம், கோபால்ட் 0.75 சதவிகிதம் இருக்கும். உலோகங்கள் அதிகமுள்ள ஒரு விண்கல்லின் எடையானது அதே அளவு கொண்ட சாதாரணக் கல்லைவிட மூன்று மடங்கு இருக்கும். உலோகங்கள் குறைவான விண்கல்லின் எடையோ சாதாரணக் கல்லின் எடையைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக இருக்கும். எனவே விஷயம் தெரிந்த ஒருவரால் விண்கல் எது என்று எளிதில் கூறிவிட முடியும். தவிர, விண்கல் ஒன்று பார்வைக்கு வித்தியாசமாக இருக்கும். அது சாதாரணக் கல் போன்று இராது. ஈரக் களிமண்ணைக் கையால் பிடித்து வைத்தால் எப்படியிருக்குமோ, அந்த மாதிரியில் விண்கல் இருக்கும். மேற்புறமானது உருகிய இரும்புக்கட்டி ஆறிய பிறகு எப்படியிருக்குமோ, அந்த மாதிரியிலும் இருக்கும்.
விண்கல் ஒன்று காற்று மண்டலம் வழியே வேகமாகப் பூமியை நோக்கி இறங்கும்போது சூடேறித் தீப்பற்றும். இதனால் சில விண்கற்கள் நடுவானில் அழியலாம். சில விண்கற்கள் நடுவானில் வெடித்துச் சிதறுவதுமுண்டு.
ஆதிகால மனிதர்கள் விண்கற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைக் கொண்டு தங்களுக்கான கருவிகளை உண்டாக்கிக் கொண்டனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வேட்டையாடுவது, இறைச்சியை வெட்டுவது போன்ற பல காரியங்களுக்குத் தகுந்த கற்களைத் தேடியலைந்த ஆதிகால மனிதர்கள், இரும்பு அதிகம் அடங்கிய விண்கற்களைக் கண்டெடுத்து அவற்றைக் கொண்டு தங்களுக்கான கருவிகளைத் தயார் செய்து பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
ஆதிகாலத்து மக்களின் கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட கூரான ஆயுதங்கள், ஈட்டி முனைகள், அணிகலன்கள் ஆகியவற்றை ஆராய்ச்சிக்கூடத்தில் வைத்து ஆராய்ந்தபோது அவை வானிலிருந்து வந்த அதிகம் இரும்பு அடங்கிய விண்கற்களைக் கொண்டு செய்யப்பட்டவை என்று தெரியவந்தது. பூமியில் கிடைக்கும் இரும்புத் தாதுவில் பொதுவாக கோபால்ட் என்ற உலோகம் இருப்பதில்லை. ஆனால், விண்கற்களில் கோபால்ட் உண்டு. இதை வைத்துத்தான் நிபுணர்கள் மேற்படி முடிவுக்கு வந்தனர்.
விண்கற்கள் கடவுள் அனுப்பியவை என்று பண்டைக்கால மக்கள் கருதி அவற்றை வைத்து வழிபாடு செய்தனர். கிரேக்கர்கள் விண்கற்களைப் புனிதப் பொருளாகக் கருதினர்.
பூமியில் வந்து விழுகிற விண்கல் எந்த அளவில் வேண்டுமானாலும் இருக்கலாம். அது சிறு கூழாங்கல் அளவில் இருக்கலாம் அல்லது பல மீட்டர் நீளமும் பல டன் எடையும் கொண்டதாகவும் இருக்கலாம்.
உதாரணமாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2003-ம் ஆண்டில் முசாபர்நகர் அருகே வந்து விழுந்த விண்கல் ஒன்றின் எடை 17 கிலோ. அது 11 சென்டிமீட்டர் பருமனும் 29 சென்டிமீட்டர் குறுக்களவும் கொண்டதாக இருந்தது. எனினும், ஆப்பிரிக்கா
தகவல் : அதிரை M.அல்மாஸ்
No comments:
Post a Comment