Latest News

தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி

தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி துறைமுகம், வாணியம்பாடி, நாகை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி
1.சோழிங்கநல்லூர்
2.செய்யூர்
3. அரக்கோணம்
4. கள்ளக்குறிச்சி
5.உளூந்தூர்பேட்டை
6.திட்டக்குடி
7.காட்டுமன்னார்கோயில்
8.அரூர்
9. சீர்காழி...
10.ஊத்தங்கரை ஆகிய தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதியும் திருமாவளவனும் கையெழுத்திட்டனர்
பா.ம.க., போட்டியிடும் 30 தொகுதிகள் அறிவிப்பு
தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க., போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி,
1.திருப்போரூர்
2.காஞ்சிபுரம்
3.காஞ்சிபுரம்
4.ஆற்காடு
5.போளூர்
6.ஜோலார்பேட்டை
7.செஞ்சி
8.மயிலம்
9.நெய்வேலி
10.மேட்டூர்
11.ஓமலூர்
12.எடப்பாடி
13.பவானி
14.தர்மபுரி
15.பூம்பகார்
16.திண்டுக்கல்
17.ஆலங்குடி
18.மதுரவாயல்
19.அணைக்கட்டு
20.ஜெயங்கொண்டம்
21.பர்கூர்
22.வேளச்சேரி
23.கும்மிடிப்பூண்டி
24.புவனகிரி
25.கோவில்பட்டி
26.திண்டிவனம்
27.சோழவந்தான்
28.வேதாரண்யம்
29.பரமத்திவேலூர்
30.பாலக்கோடுஆகிய தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடும். இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதி மற்றும் ராமதாஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
நன்னிலம்,
திருத்துறைப்பூண்டி,
மன்னார்குடி,
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தளி,
சிவகங்கை,
பவானிசாகர்,
அம்பாசமுத்திரம்,
வால்பாறை,
ஆலங்குடி ஆகிய சட்டசபை தொகுதிகளில் போட்டியிடக்கூடும்.

இதானா அந்த 'டன் டனா டன்'!?

அதிக அறிமுகம் தேவையில்லை.... சன் டிடிஎச் கருவி மற்றும் கனெக்ஷன் வாங்கிய ஒரு வாடிக்கையாளரின் அனுபவம் இது.


கடந்த ஆண்டு ஆரம்பத்தில், சன் டைரக்ட் கருவி மற்றும் டிஷ் ஆன்டெனா வாங்கினால் போதும். ஆண்டு முழுக்க இலவசமாய்ப் பார்க்கலாம், இன்ஸ்டலேஷன் கட்டணம் இல்லை என்றெல்லாம் ஏகத்துக்கும் விளம்பரம் செய்திருந்தனர்.

இதைப் பார்த்து, தெளிவாக விசாரித்தும் விசாரிக்காமலும் ஏராளமானோர் சன் டிடிஎச் கருவியை வாங்கினர். அவர்களில் சென்னை கேகே நகர் வாசியான ஐடி பணியாளர் கே செல்வகுமாரும் ஒருவர். இந்தக் கருவிக்கு அவர் ரூ 2500க்கும் அதிகமாக செலுத்தியுள்ளார். கருவி அவருக்கே சொந்தம் என்று சொல்லி விற்றுள்ளனர்.

கடந்த ஆண்டில் 8 மாதங்கள் வரை இந்த கருவியைப் பயன்படுத்தியவர், வேலை நிமித்தம் காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக பயன்படுத்தாமல் பரணில் போட்டுவிட்டாராம். நேற்று திடீரென்று சன் டைரக்டிலிருந்து பேசுவதாகக் கூறி அவரைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

மேற்கொண்டு நடந்ததை செல்வகுமாரே கூறுகிறார்:

"சன் டைரக்டிலிருந்து பேசுவதாகக் கூறி இருவர் என்னைத் தொடர்பு கொண்டனர். கடந்த ஆண்டு 8 மாதங்கள் பயன்படுத்தியதற்கு, நான் கொடுத்த ரூ 2500 சரியாகிவிட்டதாகவும், கடந்த நான்கு மாதங்களாக ஏன் பயன்படுத்தவில்லை என்றும் கேட்டனர். இதைவிட பெரிய ஷாக், அந்த கருவியை திரும்பக் கொடுக்குமாறு கேட்டதுதான்!

ஏன் என்று விசாரித்தால், 'நீங்கள் அப்படித்தான் அக்ரிமெண்டில் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்கள். பணம் கட்டிக் கொண்டே இருந்தால்தான் டிடிஎச் கருவி உங்களுக்கு சொந்தம். இல்லாவிட்டால், நாங்கள் திருப்பி எடுத்துக் கொள்வோம்' என்றும் கூறி, போனை வைத்துவிட்டார்கள்.

எனக்கே சொந்தம் என்று கூறித்தான் இந்த கருவியை விற்றனர். இந்த நிலையில் அதை திருப்பிக் கேட்பது பெரிய மோசடி. அதைப் பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் என் விருப்பம். இதுபற்றி நான் போலீஸில் புகார் தரத் திட்டமிட்டுள்ளேன். நுகர்வோர் நீதிமன்றத்துக்கும் போகப் போகிறேன். என்னிடம் அவர்கள் போன ஆண்டு கொடுத்த அத்தனை விளம்பரங்களும் பத்திரமாக உள்ளன," என்றார்.

இதுகுறித்து சன் டைரக்ட் நிறுவன அதிகாரிகளிடம் நாம் தொடர்பு கொண்டு விசாரித்தோம். கடைசி வரை இந்த எக்ஸ்டென்ஷன், அந்த எக்ஸ்டென்ஷன் என டெலிபோன் லைனை மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டிருந்தார்களே தவிர, யாரும் பதில் மட்டும் சொல்லவில்லை. மீண்டும் விசாரித்தபோது, இதுபற்றி நாங்கள் எதுவும் பேச முடியாது என்று கூறி போனை வைத்து விட்டனர் (அருமையான வாடிக்கையாளர் சேவை!).

வீட்டுக்கு வீடு சன் என்று ஆரம்பிக்கும் அவர்களின் விளம்பரத்தை டன் டனா டன் என்று முடிப்பார்கள். ஆனால் அதன் பின்னால் டன் டன்னாக அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதுதான் இதற்கு அர்த்தமோ!
தகவல் : அதிரை M.அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.