சென்னை: மத்திய தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா மூச்சுத்திணறி இறந்துள்ளார் என்று பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார். சாதிக் பாட்சாவின் உடல் நேற்று சென்னை - ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு தொடங்கி சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பிரேதப் பரிசோதனை முழுவதும் போலீஸார் விடியோவில் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் வி.டேகல் மருத்துவமனைக்கு வெளியே நிருபர்களிடம் கூறுகையில், "இது தற்கொலையா, கொலையா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. இதுபற்றி அறிக்கை தயாராக இன்னும் 2 வாரங்கள் ஆகும்.
கழுத்து இறுக்கப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளது. எனினும், அதற்கான காரணம் தடயவியல் துறை அறிக்கை வரும் வரை உறுதிப்படுத்த முடியாது. உடலில் வேறு எந்தப் பகுதியிலும் காயம் ஏற்படவில்லை," என்றார் அவர்
நன்றி : இந்நேரம் .காம்
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment