2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் அண்மையில் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்தியது.
அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சி.பி.ஐ அதிகாரிகள் டெல்லியில் 7 இடங்கள் உட்பட 34 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நீரா ராடியாவின் வீடு மற்றும் அலுவலகம், முன்னாள் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத் தலைவர் பிரதீப் பைஜாலின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பிரபல வாரமிருமுறை இதழான நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் இல்லத்திலும், பேராயர் ஜெகத் கஸ்பரின் அலுவலகத்திலும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ராசாவின் ஆடிட்டர் கணபதி சுப்பிரமணியன் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
பிரபல இதழின் இணை ஆசிரியர் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருவது பொதுமக்களுக்கு ஊடகங்கள் மீது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் அண்மையில் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்தியது.
அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சி.பி.ஐ அதிகாரிகள் டெல்லியில் 7 இடங்கள் உட்பட 34 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நீரா ராடியாவின் வீடு மற்றும் அலுவலகம், முன்னாள் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத் தலைவர் பிரதீப் பைஜாலின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பிரபல வாரமிருமுறை இதழான நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் இல்லத்திலும், பேராயர் ஜெகத் கஸ்பரின் அலுவலகத்திலும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜகத் கஸ்பரின் தமிழ் மையத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி முக்கிய பொறுப்பில் இருப்பது குறிப்பிடத் தக்கது. ராசாவின் ஆடிட்டர் கணபதி சுப்பிரமணியன் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
பிரபல இதழின் இணை ஆசிரியர் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருவது பொதுமக்களுக்கு ஊடகங்கள் மீது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment