Latest News

முப்பெரும் விழா! CMN ஸலீம் சிறப்புரை!!

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
ஹிஜ்ரீ / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி!
கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
சங்கத்தின் 6ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!!!
 
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
 
ஹிஜ்ரீ இஸ்லாமியப் புத்தாண்டின் வருகையொட்டி குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'முப்பெரும் விழா', (1) ஹிஜ்ரீ / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி (2) கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி (3) சங்கத்தின் 6ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி என தொடர்ந்து இரண்டு நாட்கள், மூன்று இடங்களில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.
  சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு முப்பெரும் விழாவில் தமிழகத்திலிருந்து வருகை தரும் சமூக நீதி அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக நீதி முரசு மாத இதழின் ஆசிரியரும், சீரிய சிந்தனையாளரும், சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு மிகப்பெரும் களப்பணியாற்றி வரும் CMN முஹம்மது ஸலீம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றார்....
  முதல் நிகழ்ச்சி:
  16.12.2010 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் 'இஸ்லாமியர்களின் கல்வி... நேற்று... இன்று... நாளை...' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும்.
  இரண்டாம் நிகழ்ச்சி:
  17.10.2010 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து குவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'அஷ்-ஷைக்ஃகா ஸபீக்கா' பள்ளிவாசலில் 'தற்போதையத் தேவை... சமுதாயச் சேவை...' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும். இந்நிகழ்ச்சி ஆண்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  மூன்றாம் நிகழ்ச்சி:
  17.10.2010 வெள்ளிக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில் உள்ள)' பள்ளிவாசலில் 'மறைக்கப்பட்ட நமது வரலாறும், அதை மீட்டெடுப்பதில் நம்முடைய பங்களிப்பும்' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும்.
 இம் முப்பெரும் விழாவில் குவைத் வாழ் தமிழ் உலமா பெருமக்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாழ்த்துரைகளையும், சிற்றுரைகளையும் வழங்க இருக்கின்றனர். துஆவுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் இனிதே நிறைவுபெறும் இன்ஷா அல்லாஹ்.
  இச்சிறப்புமிகு முப்பெரும் விழாவில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
  மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை  பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
 நன்றி. வஸ்ஸலாம்.
  செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்
  இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றன
தகவல் அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.