இன்று உச்ச நீதி
எட்டிப்பார்த்தால் பீனல் கோடுகள்…
தொட்டுப் பார்த்தால் பூணூல் கோடுகள்
என்ற தோழர் துரை. சண்முகம் அவர்களின் கவிதை வரிகளுக்கேற்ப நேற்று அலஹாபாத் உயர்நீதி மன்றம் முஸ்லீம்களுக்கு சொந்தமான 450 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அல்லாஹ்வின் ஆலயத்தை குரங்கு ஆப்பசைத்த கதையாக சமரச தீர்ப்பு எனும் பெயரில் ஒரு கட்டப் பஞ்சாயத்தை நடத்தியுள்ளது. “இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது. ” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.
கிராமங்களில் அப்பாவி ஒருவனின் வீட்டை இடித்தால் அவன் பஞ்சாயத்துக்காக ஊர் முக்கியஸ்தரிடம் போனால் அவர் இருவரிடமும் பணம் வாங்கி கொண்டு இருவருக்கும் பங்கிட்டு கொடுப்பார். இங்கும் அது தான் நடந்திருக்கின்றது. ஓரே ஒரு வித்தியாசம் பணம் மட்டும் வாங்கவில்லை. அதுவும் உறுதியாக தெரியவில்லை. 1992-ல் உலக மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக அறிவிப்பு செய்து முஸ்லீம்கள் பதைக்க பதைக்க பார்க்கும் போது இறையில்லத்தை இடித்த காவி கூட்டத்தின் செயலுக்கு சற்றும் சளைத்ததல்ல இந்நீதிமன்றங்களின் கட்டப்பஞ்சாயத்தும்.
இப்படி ஒரு தீர்ப்பை சொல்வதற்கு 60 ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கின்றது என்பது தான் விந்தையிலும் விந்தை. ராமர் எனும் கற்பனை கதாபாத்திரத்திற்காக வெற்று நம்பிக்கைக்காக வரலாற்று தகவல்களையும் உண்மைகளையும் குழி தோண்டி புதைத்து வெளியிட்டுள்ள தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவாரங்கள் வரவேற்றுள்ளதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. ஏனெனில் அத்வானியும் மோடியும் நீதிபதிகளாக இருந்தால் கூட இப்படிப்பட்ட தீர்ப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் சிலைகள் வைக்கப்பட்ட அன்றே முஸ்லீம்கள் அச்சிலைகளை தூக்கி வீசி எறிந்தால் இச்சம்பவமே இவ்வளவு தூரம் போயிருக்காது. அன்று நம்முடைய அசிரத்தையும் அதைரியமுமே மஸ்ஜித் இடிக்கப்படுமளவு கொண்டு சென்றது. அன்று பள்ளியை காப்பாற்ற சில உயிர்கள் ஷஹீதாகியிருந்தாலும் பாபரி காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் இன்று பாபரியும் போனது. பாபரியின் பெயரில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களும் ஷஹீதானார்கள்.
காலம் காலமாய் மனித மனோ இச்சைகளின் அடிப்படையில் உருவான இந்நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்பை பார்த்திருந்தும் எப்படி நம் தலைமைகள் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கொள்வோம் என்று சொன்னார்கள் என்பது புரியவில்லை. உச்சநீதிமன்றமும் இதே தீர்ப்பை சொன்னால் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என்பது புரியாத புதிர்.
உண்மையில் அது கோவிலை இடித்து கட்டப்பட்டிருந்தால் கூட 1947-ல் இருந்த நிலையே தொடர வேண்டும் எனும் அடிப்படையிலும் இத்தீர்ப்பு அநீதியானது. அல்லாஹ்வின் ஆலயத்தை விட்டு கொடுப்பதற்கு எம்முஸ்லீமுக்கும் உரிமையில்லை எனும் நிலையில் மீண்டும் அவ்விடத்தில் இறையில்லம் கட்டும் எண்ணத்தை முஸ்லீம்களிடம் ஏற்படுத்தி மக்கள் சக்தியை ஒன்று திரட்டி மீண்டும் பாபரியை கட்டும் முயற்சியை கட்ட ஆரம்பிக்க வேண்டும். அப்படி யாராவது முன் வந்தால் அவர்களின் பின்னால் அணி திரள சமுதாயம் தயாராக வேண்டும்.
அத்தோடு இம்மூட நம்பிக்கைகளையும், பொய் கடவுள்களையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி இஸ்லாத்தை ஒவ்வொருவரின் வீட்டிலும் சென்று அழைப்பு பணியாற்றுவதும், இறை சட்டங்களே இப்புவியை ஆளக்கூடிய வகையில் தீனை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுவதுமே பாபரி மீண்டும் எழுப்பப்படவும் இன்னொரு பாபரி நிகழாமல் தடுக்கவும் நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளாகும்.
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment