தகர்க்கப்பட்டது விமானத் தாக்குதலில் அல்ல என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
வாஷிங்டனில் உலகவர்த்தக மையம் தகர்க்கப்பட்ட ஒன்பதாவது நினைவுத் தினம் அனுஷ்டிக்கும் வேளையில் ஆர்கிடெக்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் ஃபார் 9/11 ட்ரூத் என்ற அமைப்பு உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்டது குண்டுவெடிப்பின் மூலம்தான் என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று நடந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ விளக்கம் தவறு என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் ரிச்சார்ட் காஜ் தெரிவித்துள்ளார்.
கட்டிடங்களின் மீது விமானங்கள் மோதவில்லை எனவும், அக்கட்டிடங்களில் நடந்த குண்டுவெடிப்பினால்தான் உலக வர்த்தக மையம் தகர்ந்தது என காஜ் கூறுகிறார்.
உலக வர்த்தக மையம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து உருகியநிலையிலான உலோகச் சிதறல்கள் கிடைத்துள்ளன. விமான எரிபொருள் இரும்பையோ அல்லது ஸ்டீலையோ உருக்குவதில்லை. ஆதலால் கட்டிடத்தின் உள்பகுதியிலிருந்து ஏதேனும் பொருள்தான் கட்டிடம் தகர்வதற்கு காரணமாகயிருக்கும்-அறிக்கை கூறுகிறது.
விமானம் மோதாமலேயே 6.5 வினாடிகளில் கட்டிடங்கள் தகர்ந்தது எப்படி? என்பதுக் குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என 600 ஆர்கிடெக்டுகள் மற்றும் என்ஜினீயர்கள் அடங்கும் அவ்வமைப்பு கோரியுள்ளது.
விமானம் மோதாமலேயே 6.5 வினாடிகளில் கட்டிடங்கள் தகர்ந்தது எப்படி? என்பதுக் குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என 600 ஆர்கிடெக்டுகள் மற்றும் என்ஜினீயர்கள் அடங்கும் அவ்வமைப்பு கோரியுள்ளது.
உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்ட இடத்திலிருந்து கிடைத்த உலோக சிதறல்களில் நானோ தெர்மிட்டிக் ஒருங்கிணைப்பின் சிதறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கட்டிடத்தில் குண்டுவெடிப்பு
நிகழ்ந்துள்ளதற்கு ஆதாரம் எனவும் அவ்வமைப்பு கூறுகிறது.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்
தகவல் அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment