Latest News

கொஸோவாவில் ஸ்கார்ப் தடை - மக்கள் ஆர்ப்பாட்டம்

கொஸோவா நாட்டில்  தலையை மறைப்பதற்கு ஸ்கார்ப்  அணிந்து வந்த ஒரு முஸ்லிம் பெண்ணை அவ்வாறு அணிந்து வரக் கூடாது என ஒரு பள்ளி தடை செய்துள்ளது. இதனைக் கண்டித்து நேற்று ( 08.10.10) நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசுக்கெதிரான கோஷங்களை எழுப்பியவாறு தலைநகர் பிரிஸ்தினாவில் உள்ள அரசு கட்டிடங்களை நோக்கி முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர்.

”Stop Discrimination" "Unveil the mind, not the head " Yes to Kosova Democratic Republic, No to Kosova anti-islamic dictatorship" போன்ற பதாகைகளை ஊர்வலத்தில் ஏந்தியவாறு மக்கள் சென்றனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஸ்கார்ப் அணியாத ஒரு பெண்மணி கூறும்போது இதனை அணிவது இறைவனின் கட்டளை என்றும் தானும் விரைவில் இதனை அணிவேன் என்றும் கூறினார்.

கொஸோவாவின் அரசியல் அமைப்பு மதச் சுதந்திரத்தை வழங்கினாலும் கல்வி அதிகாரிகள் மத சம்பந்தமான அடையாளங்கள் அணிந்து வருவதை தடை செய்துள்ளனர். கொஸோவாவின் மக்கள் தொகையான 20 லட்சத்தில் 90 சதவிகிமானோர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: www.inneram.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.