புது தில்லி : அதிர்ச்சி தரக் கூடிய சம்பவமாக, காவல்துறையில் பணியாற்றும் பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரே தலைமை காவலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் பிப்ரவரியில் நடந்த இவ்விவகாரம் சம்பந்தமாக இது வரை அந்த சப் இன்ஸ்பெக்டர் கடந்த 8 மாதமாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியாமல் திணறுவது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இச்சம்பவம் தெற்கு தில்லியில் உள்ள முக்கிய இடங்களில் ஒன்றான லோடி காலனியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள அக்காவலர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதுள்ளதோடு அப்பெண்ணின் சட்டையை கிழித்துள்ளார். மேலும் படிக்கட்டுகளில் அப்பெண்ணை உருட்டி விட்டதோடு தலையிலும் பலமாக தாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அப்பெண் சப் இன்ஸ்பெக்டர் பல முறை தன் மேலதிகாரிகளிடம் எழுத்து பூர்வமாக புகார் அளித்தும் இது வரை முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்.ஐ.ஆர் இது வரை பதிவு செய்யப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் கணவரான மஹேந்திர திவானி தன் மனைவி தாக்கப்பட்ட போது மனைவியின் அபயக் குரல் கேட்டு தான் காப்பாற்றியதாகவும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விபரங்கள் தேடிய போது விசாரணை அதிகாரிகளுக்கு மேலதிகாரிகள் தவறான தகவல் கொடுத்து குற்றம் சாட்டப்பட்ட நரேந்தரை காப்பாற்ற முயல்வதாக சொன்னார்.
நன்றி: www.inneram.com
No comments:
Post a Comment