Latest News

பொய் பிரசாரம் செய்து கலவரத்தை தூண்டும் ஹிந்து அமைப்புகள்

கடந்த வாரம் கூத்தாநல்லூர் விநாயகர் சதுர்த்தியில் அத்துமீறிய ஹிந்து முன்னணி அமைப்பினருக்கு எதிராகவும் காவல் துறைக்கு எதிராகவும் நடத்த பட்ட சாலை மறியலை கண்டித்து ஹிந்து சமுதாய ஒருங்கிணைப்பு பேரவை கண்டன ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளது.

ஜனநாயக ரீதியில் இதை கண்டித்த இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிராகவும் கூத்தாநல்லூர் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராகவும் இந்த அமைப்பினர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். முஸ்லிம் அமைப்புகள் அவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறுகிறது காந்தி-யை கொன்று முஸ்லிம்கள் மீது பழிபோட்ட பரம்பரையை சேர்ந்த கும்பல். இந்த கயவர்களுகா தெரியாது கலவரத்தை தூண்ட.

ஹிந்து ஒழிக! ஹிந்து சமுதாயம் ஒழிக! ஹிந்துஸ்தான் ஒழிக! பாகிஸ்தான் வாழ்க!
என்று நம் முஸ்லிம் இளைஞர்கள் கோஷம் எழுப்பினர்களாம். இதனை கண்டித்து 22 -09 -2010  புதன் கிழமை காலை 10 மணியளவில் லெட்சுமாங்குடி பாலம் அருகில் ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தையும் அழைத்து ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது இந்த அமைப்பு. ஹிந்து முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழும் கூத்தாநல்லூர்-ல் முஸ்லிம் விரோத போக்கை அனைத்து ஹிந்துகளிடம் கொண்டு வந்து கலவரம் நடத்த முயற்சிகின்றனர். பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வெளியாகும் இந்த நேரத்தில் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்திய அளவில் மிக பெரிய கலவரத்தை முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக நடத்த ஹிந்துத்துவ சக்திகள் தயாராகி கொண்டிருக்கும் வேலையில் இது போல் பொய் பிரசாரம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக சாதாரண ஹிந்துக்களுக்கும் வெறுப்பை உண்டு பண்ணும் வகையில் அவர்களின் நோட்டீஸ் வெளியாகி உள்ளது, இதை உடனே கூத்தாநல்லூர் ஜமாத்தினர் களத்தில் இறங்கி இந்த ஆர்ப்பாட்டம் நடக்காமல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையாக நின்று நம் சமுதாய மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் இந்த ஆர்ப்பாட்டத்தை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும். இதை நாம் தடுக்க தவறினால், பிற்காலத்தில் கை சேதபட்டும் நிற்பது நம் தலைமுறைகள் தான். ஒற்றுமையே பலம்.

எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் ஓர் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான். அல்-குர்ஆன் 61 :4

நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். அல்-குர்ஆன் 3 : 103

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.