Latest News

மதுக்கூரில் காவி வெறியர்களின் அட்டகாசம்

இன்று விநாயகர் ஊர்வலம் மதுக்கூர் சிவக்கொல்லையில் 3 :30 மணிக்கு தொடங்கி 6 :30 மணிக்கு முடிந்ததுவழியெங்கும் வெறிக் கூச்சலுடண் வந்த கூட்டத்தினர் மதுக்கூரை கடக்கும் போது 6 கடைகளையும் 10 க்கும் மேற்பட்ட வீடுகளையும் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளார்கள் இதனால் நிலைமை பதட்டமானது மிகமிக குறைவான எண்ணிக்கையில் இருந்த காவல்துறையினரால் நிலைமையை கட்டுப் படுத்த முடியவில்லை இதன் பதிலடியாக ஊர்வலத்தில் ஒரு சிலர் கல்வீசியிருக்கிரார்கள்
எப்போதும் 50 க்கும் குறைவான எண்ணிக்கைகள் செல்லக்கூடிய ஊர்வலத்தில் 100 மேற்பட்டோர் கலந்துக் கொண்டார்கள். முத்துப்பேட்டையில் தங்களது எண்ணத்தைசெயலாற்ற முடியாதவர்கள் மதுக்கூரில் நிறைவேற்றி உள்ளார்கள்.

இந்நிலையில் தமுமுக, மமக மற்றும் PFI நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது ஊர்வலத்தில் முதலில் வன்முறை துவக்கியவர்களை கைது செய்யவில்லை. நேற்று மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர் தமுமுக நிர்வாகிகளை சந்தித்து தங்களுக்கு ஒத்துழைப்பு தர கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் அமைதிஏற்படுத்திக் கொண்டிருந்த தமுமுக மமக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது, உடனடியாக மமக மாவட்டச் செயலாளர் கலந்தர் அவர்கள் மமக மாநில துணைச் செயலாளர் தமிம் அன்சாரி அவர்களை தொடர்புக் கொண்டு விபரங்களைக் கூறினார்.

உடனடியாக தமிம் அன்சாரி அவர்கள் தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை தொடர்புக் கொண்டு கைது செய்யப்பட்ட தமுமுக மமக மற்றும் இதர அப்பாவிகளையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்


தகவல் : மதுக்கூர் தமுமுக
மதுக்கூரில் இதர சட்டநடவடிக்கைகளை மேற்க்கொள்ள சகோதரரர் ராவத்தர்ஷா தலைமையில் ஒருக் குழுவினர் தீவிரமாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள், தொடர்ந்து தமுமுக தலைமை மதுக்கூர் நிலைமையை கவனத்துடன் அணுகிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.