கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் பஸ், ஆட்டோ, கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. திமுக கொடிக் கம்பங்கள், பேனர்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியத்தில் இந்துமுன்னணி சார்பில் 155 விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் மார்த்தாண்டம் அருகே உள்ள மிடாலம் கடலில் கரைப்பதற்காக கருங்கல் அருகே கொண்டு வரப்பட்டன.
அப்பகுதியில் இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. மீனவர்களின் வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. ஒரு ரேஷன் கடையை நொறுக்கிய கும்பல் அங்கிருந்த அரிசியை எடுத்து சாலையில் வீசியது.
அப்பகுதி வழியாக வந்த அரசு பஸ்ஸையும் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு விட்டு தீவைத்துக் கொளுத்தினர். நிதி நிறுவனம் ஒன்றையும் உடைத்து உள்ளே புகுந்து அடித்து நொறுக்கினர். அங்கிருந்த ரூ. 7 லட்சம் பணம் மற்றும் ஏராளமான நகைகளையும் அபகரித்துக் கொண்டனர்.
நாகர்கோவில் திமுக முப்பெரும் விழாவையொட்டி திமுகவினர் வைத்திருந்த பேனர்கள், திமுக கொடிக் கம்பங்களையும் இந்து முன்னணியினர் வெட்டிச் சாய்த்தனர்.
அப்பகுதியே பெரும் போர்க்களமாக இருந்தது. விநாயகர் சிலைகளுடன் வாகனங்கள் ஆங்காங்கு தேங்கி நின்றுயாரும் நகரக் கூட முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கலவரத்தில் போலீஸார் பலரும் காயமடைந்தனர். கலெக்டர் ராஜேந்திர ரத்னூ மற்றும் எஸ்.பி.ராஜேந்திரன் விரைந்து வந்து இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் பெருமளவில் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்இரு தரப்பினரும் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் இந்து முன்னணியில் கலவரத்தில் குதித்தனர். உதயமார்த்தாண்டம் சந்திப்புப் பகுதியில், பெரும் வன்முறை மூண்டது.கடற்கரைக்கு வந்ததும், தங்கள் கொண்டு வந்த விநாயகர் சிலைகளை, கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த மீன் பிடி படகுகள் மீது அவற்றை வைத்ததாக தெரிகிறது. இதற்கு அங்கிருந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
No comments:
Post a Comment