மஹல்லா தோறும் ஒரு TNPSC அகாடமி
-----------------------------
அன்பார்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் மேம்பாட்டு குழுக்கள் மற்றும் சங்கங்களுக்கு....
ஒரு அன்பான வேண்டுகோள்.
அல்ஹம்துலில்லாஹ் ..
இறைவன் அருளால் தமிழகத்தில் சுமூகமான அரசியல் சூழல் நிலவும் இந்த கால கட்டத்தில்
அரசுப் பணிகளை நோக்கி நம் இளைய சமூகத்தை உந்தித் தள்ள வேண்டிய மிக முக்கிய பொறுப்பு நமக்கிருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் இந்த மாதத்தின் இறுதியில் TNPSC குரூப் 2, மற்றும் குரூப் 4 தொடர்பான அறிவிப்புகள் வர உள்ளன.
இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி மஹல்லா தோறும் பள்ளிவாசல்களின் மேல் தளத்திலோ அல்லது சமுதாய கூடங்களிலோ ஒரு TNPSC அகாடமியை துவங்கி,
மஹல்லா மாணவ மாணவிகளை/ பட்டதாரிகளை பயிற்றுவித்து ஊக்கப்படுத்தினால்,
இன்ஷா அல்லாஹ் ஒரு மஹல்லாவில் குறைந்தபட்சம் இரண்டு அரசுப் பணியாளர்களை உருவாக்க இயலும்.
மாணவ மாணவிகள் மற்றும் பட்டதாரிகளை மிக சுலபமாக பள்ளிவாயிலோடு தொடர்பில் இணைக்க முடியும்.
இது மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்.
அடுத்த வரும் வளரும் தலைமுறைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் முண்ணுதாரணமாகவும் அமையும்.
அது மட்டுமல்லாமல் போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் நம் சமூக இளைஞர்களை பாதுகாக்கவும் முடியும்.
இன்ஷா அல்லாஹ்...
இந்த உன்னத பணிக்கு தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் எப்போதும் துணை நிற்கும்.
-----------------------------
மஹல்லா தோறும் அரசுப் பணியாளர்களை உருவாக்குவோம்.
சமூகத்தை வளப்படுத்துவோம்.
- மு.முஹம்மது இஸ்மாயில்
உயர்கல்வி ஆலோசகர்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்
No comments:
Post a Comment