சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு தொடர்பாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பரந்தாமன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை இருவரும் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இதன் பின்னர் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் பேசியபோது, கே.பி. பூங்காவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டி முடிக்கப் பட்டிருக்கிறது. இந்த குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரினை கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்றார்.
அவர் மேலும், கலந்த 2018 இல் தொடங்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு இந்த கட்டிடம் முடிக்கப்பட்டுள்ளது. தொட்டால் சினிங்கி மாதிரி தொட்டாலே விழுகின்ற கட்டடத்தைக் கண்டுபிடித்த ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி. அதனால் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி கட்டி முடித்த அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், இந்த கட்டிடங்களை கட்டிய ஒப்பந்ததாரர்களை கண்டுபிடித்து அவர்கள் கட்டிய அனைத்துக் கட்டடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
புளியந்தோப்பு கே.பி. பூங்கா கட்டிடம் கட்டி முடித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், ஓ. பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
பரந்தாமனின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த தேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கே.பி. பூங்காவில் கட்டிடங்கள் மிகவும் மோசமாக கட்டப்பட்ட இருக்கின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு 112.60 கோடி செலவில் 850 குடியிருப்புகள் கட்ட கட்டப்பட்டுள்ளன. 2020 மே மாதம் முதல் 2020 1 மார்ச் மாதம் வரைக்கும் கொரோனா ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வந்துள்ளன.
கடந்த வாரம் பெய்த மழையால் சேதம் சேதமடைந்து இருக்கிறது. இதை எடுத்து தரம் மற்றும் உறுதித்தன்மையை அறிய நானும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் ஆய்வுக்கு சென்றோம். ஆய்வு முடிவுகளை இந்திய தொழில்நுட்ப கழகத்திற்கு கடிதமாக அனுப்பி இருக்கிறோம். ஐஐடி அறிக்கை வந்ததும் தவறு நடந்தது கண்டறியப்பட்டால் ஒப்பந்ததாரர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment