வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி ரோட்டிலுள்ள பசவதன் குளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் காலிக் அகமது என்கிற பாபுல். வயது 40. கட்டட வேலை செய்துவந்த இவர், சமீபத்தில் ஓர் நாள் இரவு ஒரு வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை நோட்டம் பார்த்துள்ளார். அந்தச் சிறுமியின் வீட்டுக் கதவைத் தட்டி குடிக்க தண்ணீர் கேட்டிருக்கிறார் பாபுல். சிறுமியும் தண்ணீர் எடுத்து வருவதற்காக சமையல் அறைக்குச் சென்றபோது, பின்தொடர்ந்து உள்ளே சென்ற பாபுல், சிறுமியிடம் அத்துமீற முயற்சித்துள்ளார். சிறுமி கூச்சலிட்டதால், அவரைத் தாக்கி நிலைக் குலைய செய்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி, 'வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால் கொன்றுவிடுவேன்' என்று மிரட்டிவிட்டு பாபுல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து, சிறுமி கொடுத்த புகாரின்பேரில், வேலூர் அனைத்து மகளிர் போலீஸார் 'போக்ஸோ' உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து பாபுலை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவரின் காவலை குண்டர் சட்டத்தின்கீழ் நீட்டிக்க மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு எஸ்.பி செல்வகுமார் பரிந்துரை செய்திருந்தார். அதை ஏற்று, பாபுலை குண்டர் தடுப்புக் காவலில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிறையிலுள்ள பாபுலிடம் அதற்கான நகல் வழங்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
No comments:
Post a Comment