
இஸ்லாமியர்களின் புனித தலமான ஹஜ் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.
ஆனால், கொரோனா பரவல் அபாயம் கருதி, வெளிநாடுகளைச் சோந்தவா்கள் தங்கள் நாட்டுக்கு இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு சவூதி அரேபியா தடை விதித்திருந்தது. கொரோனா அபாயம் கருதி, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டில் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60,000 போ மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது சவூதி அரேபியாவில் இருப்பவா்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும் எனவும் வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டு இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் செல்வது ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி இன்று அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து ஹஜ் பயண விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment