
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் வேளையில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த திங்கட்கிழமை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில், 'ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. என்றாலும் கரோனா வைரஸ் நமக்கு மத்தியில் உள்ளது. தொடர்ந்து அது நமக்கு மத்தியில் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். கரோனா தடுப்பூசியை இயன்றவரை விரைவில் போட்டுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் இருக்காவிடில் நாட்டில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது' என்று கூறியுள்ளார்.
டெல்லியில் கடந்த திங்கட்கிழமை முதல் வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் ஓட்டல்களை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ள பல மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதுபோல் தமிழகத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment