
டெல்லி : எய்ம்ஸ், ஜிப்மர்
உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்பிற்கான 'இனிச்செட்' நுழைவுத் தேர்வை ஒரு
மாதம் ஒத்திவைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. எய்ம்ஸ், ஜிப்மர், பிக்மெர் உள்ளிட்ட மத்திய அரசு
மருத்துவக் கல்லூரிகளில் மேல்படிப்புகளுக்கு நடத்தப்படுவது இனிசெட் தேர்வு
என்பதாகும்.அண்மையில் இனிசெட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இணையத்தில்
பெற்றுக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்து இருந்தது.
இந்த
நிலையில், வரும் ஜூன் 16ம் தேதி நடைபெற உள்ள இனிசெட் தேர்வை கொரோனா
அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி
உச்சநீதிமன்றத்தில் மருத்துவர்கள் 23 பேர் நேற்று முறையிட்டனர்.
அவர்களது மனுவில் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக்
கல்லூரிகளில் முதுகலை மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட், பிஜி
தேர்வுகள் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதை சுட்டிக்
காட்டியுள்ளனர். நீட் தேர்வை ஒத்திவைத்துவிட்டு மற்றொரு தேர்வை நடத்துவது
நியாயம் அல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அரசியல் அமைப்பு
சட்டத்தில் கொடுக்கப்பட்ட உரிமையை பறிக்கும் செயல் என்றும் அவர்கள்
தெரிவித்து இருந்தனர்.
மேற்கண்ட வழக்கு இன்று உச்சநீதிமன்ற
நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ஜூன் 16ல் நடக்க இருந்த
இனிசெட் நுழைவுத் தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.கொரோனா காரணமாக
மருத்துவர்கள் கடுமையான பணிச்சூழலில் இருப்பதால் தேர்வு
ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment