
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது 72 நாள்களில் 15 லட்சம் வழக்குகள் பதியப்பட்டன.
தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.
கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 18-ஆம் தேதி வரையிலான 72 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 15 லட்சத்து 4,127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 15,596 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 18-ஆம் தேதி வரை 79,197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 636 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment