இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு காரணத்தால் 20 லட்சத்தை அடைந்துள்ளது தொற்று எண்ணிக்கை.
கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கை படி, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாவது இந்தோனேசியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போதுவரை 20,04,445 பேர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 14,536 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
294 பேர் இந்த கொரோனா பெருந்தொற்றால் இறந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,956 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை இந்தோனேசியாவில் 18,01,761 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போதுவரை 1,47,728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment