உத்திரபிரதேச ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மதுரா நகரில் 17 வயது சிறுமியை 2 ஆவது மாடியிலிருந்து 3 இளைஞர்கள் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அந்த 3 இளைஞர்களும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் எதிர்க்கட்சிகள் அனைவரும் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்ககோரி வருகின்றனர். மேலும், இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, உத்திரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கேட்டால் ஆன்மா நடுங்குகிறது. ஆனால் மாநில அரசு தூங்குகிறது. இந்த ஜங்கிள் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் இருக்கிறது, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment