
தமிழகத்தில் மே 10 முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இந்நிலையில் வருகின்ற மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின்போது காய்கறி கடைகள், இறைச்சிக்கடைகள் மதியம் 12 மணி வரை செயல்படும். மதுபானக்கடைகள் முழுவதுமாக மூடப்படும். முழு ஊரடங்கு காலத்தில் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டத்திலிருந்து வெளியே செல்லும் பேருந்து போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பால் விநியோகம், பத்திரிக்கை விநியோகம் செய்வதற்குத் தடையில்லை. மருந்தகங்கள், மருத்துவமனைகள் முழு நேரமும் செயல்படும். பெட்ரோல் பங்குகள் முழு நேரம் செயல்படும். உணவகங்களில் பார்சல் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்கு வழங்கப்படும். அம்மா உணவகம் முழுவதுமாக செயல்படும். நடைபாதை காய் கறிக்கடைகள், பூ கடைகள் மதியம் 12 மணிவரை செயல்படும்.
தேனீர் கடைகளுக்கு நண்பகல் 12 மணி வரை அனுமதி. தபால் சேவை அனுமதிக்கப்படும். முழு ஊரடங்கின் நாட்களில் உணவகங்களில் காலை 6 முதல் 10 வரையும், மதியம் 12 முதல் 3 வரையும், மாலை 6 முதல் 9 வரையும் பார்சல் வழங்கப்படும். Swiggy, Zomato மூலம் உணவு விநியோகம் மேல்குறிப்பிட்ட நேரங்களில் அனுமதிக்கப்படும். நியாய விலைக் கடைகள் காலை 8 முதல் 12 மணி வரை மட்டுமே செயல்படும். வங்கிகள் 50 சதவிகித ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் முதல் ஊரடங்கு என்பதால் இன்று மற்றும் நாளை முழு கடைகளும் காலை 6 மணி முதல் 9 வரை வழக்கம் போல் இயங்கும்.
No comments:
Post a Comment