Tamil Nadu Assembly Election 2021 Results: தமிழகம் உட்பட நான்கு மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இன் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுகவுக்கு பல்லடம், மதுராந்தகம், மதுரை (தெற்கு), அரியலூர், வாசுதேவநல்லூர், சாத்தூர் ஆகிய 6 தொகுதிகளை திமுக (DMK) ஒதுக்கியிருந்தது. இதில் சாத்தூர் தொகுதியில் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், மதுரை தெற்கில் எம்.பூமிநாதன், வாசுதேவநல்லூரில் சதன் திருமலைக்குமார், அரியலூரில் கே.சின்னப்பா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
வாக்களித்த மக்களுக்கு நன்றி, படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: மு.க. ஸ்டாலின்
இதன் மூலம் மதிமுக (MDMK) உறுப்பினர்கள் 4 பேர் சட்டப்பேரவைக்கு செல்ல உள்ளனர். இதனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக கட்சியிலிருந்து சட்டப்பேரவைக்கு நுழைய உள்ளனர். மேலும் இதுவரை சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக கட்சி இடம்பெற்ற கூட்டணி, வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதில்லை என்ற பேசை இத்தேர்தல் மூலம் தகர்த்துள்ளது.
முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக 35 இடங்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதையடுத்து, 2016 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக, 25 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இதனால் தற்போதைய சட்டப்பேரவை தேர்தல், மதிமுகவுக்கு முக்கியமானதாக கருதப்பட்டது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
No comments:
Post a Comment