
நடிகர் விவேக்கின் திடீர் மரணம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விவேக் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், சமயோசித நகைச்சுவை உணர்வுக்கும் புத்திசாலித்தனமான வசனங்களுக்கும் சொந்தக்காரர் விவேக்.

தனது நகைச்சுவையால் ஏராளமான மக்களை மகிழ்வித்தவர் நடிகர் விவேக். தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரைப்படங்களிலும் சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்திவர் விவேக். விவேக்கின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என மோடி குறிப்பிட்டுள்ளார்.
மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கிற்கு உடல்நலம் மோசமானதை அடுத்து எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த அவர் இன்று அதிகாலை 4.35 மணிக்கு காலமானார். இதனால் உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment