
பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பயனர்களுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
அதாவது, ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஒரு பயனர் தேர்வுசெய்யும் எந்தவொரு Fixed-line கனெக்ஷனுக்கான இன்ஸ்ட்டாலேஷன் கட்டணத்தை செலுத்த தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இந்த சலுகை இந்தியா முழுவதும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புகள், டிஎஸ்எல் பிராட்பேண்ட் இணைப்புகள் மற்றும் லேண்ட்லைன் சேவை போன்றவற்றை வழங்கி வருகிறது.

எனவே ஏப்ரல் 30ஆம் தேதி பிராண்ட்பேன்ட் கனெக்ஷன் எடுக்கு விரும்புவோர் இன்ட்டாலேஷன் கட்டணம் இல்லாமல் இணைப்பை பெற முடியும். வழக்கமாக பிஎஸ்என்எல் நிறுவனம் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை இன்ஸ்ட்டாலேஷன் கட்டணம் வசூலிக்கிறது.
ஜியோ இணைப்புக்கு ரூ.1000 இன்ஸ்ட்டாலேஷன் கட்டணம், ரூ.1500 வைப்புத்தொகை என்று பல நடைமுறை உண்டு. ஆனால் பிஎஸ்என்எல் இலவசமாக இணைப்பை வழங்குவதால் பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
newstm.in
No comments:
Post a Comment