Latest News

  

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு... ஆன்லைனில் பதிவுசெய்வது எப்படி- முழு விளக்கம் !

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு தொடங்கியது.

தடுப்பூசி போட நேரடியாக மருத்துவமனைகளுக்கோ, தடுப்பூசி மையங்களுக்கோ செல்வதற்கு பதில் COWIN என்ற அரசின் தளத்தில் அல்லது ஆரோக்ய சேது செயலியில் இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற விதிகொண்டு வரப்பட்டுள்ளது.

சரி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆன்லைன் மூலம் பதிவுசெய்வது எப்படி என்று பார்க்கலாம்..

  • cowin.gov.in என்ற இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.
  • பதிவுசெய்ய 'register/sign in yourself'என்பதை க்ளிக் செய்யவும்
  • உங்களுடைய 10 இலக்க மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
  • உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை நிரப்பவும்.
  • உங்களுடைய விவரங்களை பதிவுசெய்தபிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடவும்.
  • தடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகு, உங்களுக்கு குறிப்பு ஐடி (Reference ID) ஒன்று கொடுக்கப்படும். அதைவைத்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • ஆன்லைன் பதிவுக்கு தேவையான ஆவணங்கள்:

    ஆதார் அட்டை, பான் காடு, வாக்காளர் அடையாள அட்டை, ஒட்டுநர் உரிமம், சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அடையாள அட்டை, எம்.பி/எம்.எ.ஏ/எம்.எல்.சி வழங்கிய அடையாள அட்டை, பாஸ்போர்ட், பாஸ்புக்(வங்கி/ அஞ்சலகம்), ஓய்வூதிய அட்டை, மத்திய / மாநில அரசு / பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை அடையாள அட்டை. மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அவசியம்.

    ஆரோக்ய சேது செயலிமூலம் பதிவுசெய்யும் முறை

    ஆரோக்ய சேது செயலியின் முன்பக்கத்திலுள்ள கோவின் பக்கத்தை க்ளிக் செய்யவும் > தடுப்பூசி முன்பதிவை செலக்ட் செய்யவும்> மொபைல் எண்ணை டைப் செய்யவும் > ஓடிபியை நிரப்பவும். > சரிபார்க்க(Verify)வை அழுத்தவும் > அங்கிருந்து தடுப்பூசி முன்பதிவு பக்கத்திற்கு சென்றுவிடும். பிறகு கோவின் செயலிக்கு குறிப்பிட்டதைப் போன்றே பதிவுசெய்யவும்.

    முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருமே 2வது டோஸ் தடுப்பூசியையும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 28 நாட்களிலிருந்து 42 நாட்களுக்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் எடுத்திருக்கவேண்டும், இவ்வாறு கோவின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

    newstm.in

     

     

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.