மிக முக்கிய தருணத்தில் முதல்வராகும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என்று நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. திமுக தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரில் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக்கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளது.
அறுதிப்பெரும்பான்மை பெற்றதால் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட நடிகர் கார்த்தி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ' மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் ஸ்டாலினுக்கு, நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம், கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment