
உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சஞ்சய்காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை துணை முதல்வர் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அவரது மனைவிக்கும் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.
இதுதொடர்பாக துணை முதல்வர் சுட்டுரை பதிவில்,
கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று பரிசோதனை செய்தேன். தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் இருந்தேன். மேல் சிகிச்சைக்காக, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.
துணை முதல்வர் சர்மா மற்றும் அவரது மனைவி இருவரின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment