
திருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு
இயந்திரங்களை பாதுகாத்து வைக்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மன்ற கூட்ட அறை
தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அறையை செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ்,
திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர்
பார்வையிட்டனர். பாதுகாப்பு அறையில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில்
அடங்கிய 417 வாக்குச்சாவடி மையங்களின் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வைக்கப்பட உள்ளன. இங்கிருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள்
அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment