
கரோனா வைரஸ் பரவலில் திடீர் ஏற்றம் கண்டுள்ள மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு தமது உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ், இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் பரவத் தொடங்கியது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத் தின. மேலும், வைரஸ் சோதனையை அதிகப்படுத்துதல், தொற்று ஏற்பட்டவர் களை உடனடியாக தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் தீவிரப்படுத் தப்பட்டன. இதன் காரணமாக, கடந்த நவம்பர் மாதம் முதலாக வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நாட்டில் தினசரி தொற்று பாதிப்பும் கணிசமாக குறைந்தது.
இயல்பு வாழ்க்கை
இதன் தொடர்ச்சியாக, நாடு முழு வதும் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப் பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. மக்களும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கினர்.
இந்தச் சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக கரோனா தொற்று பாதிப்பு சில மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ் டிரா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வரும் நிலையில், கேரளாவில் இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதன்படி, நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பில் 75 சதவீதம் இவ்விரு மாநிலங்களில்தான் இருக்கிறது.
வருகை தரும் மத்தியக் குழு
இந்நிலையில், கரோனா பாதிப்பு அதி கரித்து வரும் மாநிலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தமிழகம், கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய 10 மாநிலங்களுக்கு தனது உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத் துள்ளது. மூன்று நபர்கள் அடங்கிய இக்குழு, மேற்குறிப்பிட்ட மாநிலங்களுக்கு சென்று கரோனா பாதிப்பு அதிகரித்தது தொடர்பாக ஆய்வு நடத்தும் என மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கரோனா பரவலை கட்டுப் படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்தந்த மாநிலங்களின் சுகாதாரத் துறை அதிகாரி களிடம் அக்குழு ஆலோசனை நடத்தும் எனக் கூறப்படுகிறது. இதுதவிர, உருமாறிய கரோனா பரவல் குறித்த எச்சரிக்கையையும் அவர்கள் விடுப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு கடிதம்
இதனிடையே, மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை சார்பில் நேற்று கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. அதில், கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் மாவட்டங்களில் ஆர்டி - பிசிஆர் சோதனைகளை அதிகப் படுத்துமாறும், தொற்று இருப்பவர் களை வேகமாக கண்டறிந்து தனிமைப் படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் 1.10 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 56 ஆயிரத்து 567 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment