
வாஷிங்டன்:-'முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான
கண்டன தீர்மானம் ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே' என அவரது
வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் முடிவுகளை
அறிவிக்க பார்லிமென்ட் கடந்த மாதம் கூடியது. தேர்தலில் தோல்வியடைந்த
குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் பார்லிமென்ட்
வளாகத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.வன்முறையைத் தூண்டும்
வகையில் பேசியதாக டிரம்புக்கு எதிராக கண்டனத் தீர்மானம் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய இந்த தீர்மானம் செனட்
சபையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.விசாரணையின் நான்காம் நாளான நேற்று முன்
தினம் டிரம்பின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:சட்டம் ஒழுங்கை மதிப்பவர்
டிரம்ப். வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் பேசியதாகக் கூறப்படுவது மிகப்
பெரிய பொய். அரசியல் பழி வாங்கும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டியதாக டிரம்புக்கு எதிராக எந்த
ஆதாரமும் இல்லை.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
No comments:
Post a Comment