
புதுடில்லி: தமிழகத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை
ஒருங்கிணைத்து, 'தேவேந்திரகுல வேளாளர்' என, அழைக்கும் சட்ட திருத்த மசோதா,
லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.'தமிழகத்தில், பட்டியல் இனத்தில்
உள்ள உட்பிரிவுகளான தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன்,
பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை
ஒருங்கிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும்' என, மத்திய
அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரைத்தது.இதையடுத்து, இதற்கான அரசியல் சாசன
சட்ட திருத்த மசோதாவை, லோக்சபாவில் சமூக நீதித்துறை இணை அமைச்சர்
கிருஷ்ணபால் குர்ஜர், நேற்று தாக்கல் செய்தார்.இதன் மீதான விவாதம்,
பார்லிமென்டின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் நடக்க உள்ளது.
எனினும், இந்த சட்ட திருத்தம் தமிழகத்துக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment