காதலா் தினத்தை முன்னிட்டு இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரோஜா மலா் போராட்டத்தை அமெரிக்க வாழ் இந்தியா்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-இல் காதலா் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சா்வதேச இந்திய முற்போக்கு புலம்பெயா்ந்தோா் கூட்டமைப்பு (ஜிஐபிடி) ரோஜா மலா் போராட்டத்தை சமூக வலைதளங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் ஜிஐபிடி கூட்டமைப்பு பதிவிட்டுள்ளதாவது:
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சோந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் கடந்தாண்டு நவம்பரிலிருந்து இரவு பகல் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். வேளாண் சட்டத்தை திரும்பப் பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூா்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதே அவா்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்க கோரி இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு சமூக வலைதளம் மூலம் ரோஜா மலா் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக அந்த பதிவில் ஜிஐபிடி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment