
ஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்,சேயையும் போலீசார் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஜெர்மனி நியூரம்பெர்க்கில் ஒரு தம்பதியினர் வீடில்லாமல் கூடாரத்தில் தங்கி வசித்து வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 20 வயதான அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதன்பின் சிறிது நேரத்தில் அந்தப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். -15 டிகிரி செல்ஸியஸ் கடும் குளிரால் தாயும்,சேயும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட ரோந்து பணியில் இருந்த காவலர்கள் தாய்,சேய் இருவரையும் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு அவர்கள் கதகதப்பாக இருப்பதற்கு ஸ்லீப்பிங் பேக்கில் வைக்கப்பட்டனர். இது போன்று இக்கட்டான நேரங்களில் சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில்லை. இந்த அறியாமையால் பல நேரங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
No comments:
Post a Comment