
புதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது
தேர்தல் ஆணையம். ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை துவங்கி
விட்டன.ஆனால், இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என, இரண்டு
திராவிடக் கட்சிகளுமே கூறவில்லை. 'காங்கிரசுக்கு, 20 தொகுதிகளை, தி.மு.க.,
ஒதுக்கும்' என, கூறப்படுகிறது. ஆனால், டில்லி காங்கிரசில் வேறொரு விஷயம்
சொல்லப்படுகிறது. 'காங்கிரசுக்கு, 15 தொகுதிகள் தான் ஒதுக்கப்படும்' என,
தி.மு.க., தரப்பில் சொல்லப்பட்டு உள்ளதாம். ஒரு ராஜ்யசபா, 'சீட்'
தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். மிகவும் குறைவான தொகுதிகளை காங்.,
ஏற்குமா என, கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
No comments:
Post a Comment