
விவசாயிகள் வீட்டில் இருந்தாலும் இறந்திருப்பார்கள் என்று ஹரியானா வேளாண் துறை அமைச்சர் ஜே.பி. தலால் கூறியது பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.
ஹரியானாவில்
முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி
நடைபெற்று வருகிறது. அம்மாநில வேளாண் துறை அமைச்சராக இருப்பவர் பா.ஜ.க.வின்
ஜே.பி. தலால். டெல்லியின் எல்லைகளில் நடந்து வரும் விவசாயிகளின்
போராட்டத்தில் மாரடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் சுமார் 200 விவசாயிகள்
இறந்துள்ளனர். போராட்டத்தில் விவசாயிகள் இறந்தது தொடர்பாக ஜே.பி. தலாலிடம்
செய்தியாளர்கள் கேட்டனர்.
செய்தியாளரின் கேள்விக்கு ஜே.பி. தலால் பதிலளிக்கையில் கூறியதாவது:
அவர்கள் (விவசாயிகள்) தங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும் அங்கும் இறந்திருப்பார்கள். நான் சொல்வதை கவனியுங்கள், ஆறு மாதத்தில் 200 பேர் அல்ல ஒன்று முதல் 2 லட்சம் பேர் வரை (கொரோனா வைரஸால்) இறக்கவில்லையா? ஒருவர் மாரடைப்பால் இறந்து கொண்டு இருக்கிறார், ஒருவர் நோய்வாய்ப்பட்ட பிறகு ஒருவர் இறந்து கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க. அமைச்சரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அடுத்த சில மணி நேரங்களில் ஜே.பி. தலால் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது அறிக்கை திரிக்கப்பட்டு மற்றும் அதற்கு தவறான பொருள் கொடுக்கப்பட்டது. அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பார்த்தேன். எனது அறிக்கையால் யாராவது காயமடைந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன். ஹரியானாவின் வேளாண் அமைச்சராக விவசாயிகளின் நலனுக்காக உழைக்கிறேன் என்று தெரிவித்தார்
No comments:
Post a Comment