
தேவதானப்பட்டி: காதலர் தினம் கொண்டாடிவிட்டு திரும்பும் போது
கொடைக்கானல் டம்டம்பாறை வளைவில் வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில்
சென்னை ஐ.டி., நிறுவன ஊழியர்கள், டிரைவர் உட்பட14 பேர்
காயமடைந்தனர்.சென்னையைச் சேர்ந்த கேசவன் 25,சேலத்தை சேர்ந்த ஜெகதீஷ் 23.
மதன்குமார் 25. பிருந்தா 23. திருநெல்வேலியைச் சேர்ந்த ஆல்பர்ட்கேபின் 25.
மயிலாடுதுறை சேர்ந்த முகமதுஅசாருதீன் 32. இவரது மனைவிஆயிஷா 26, உட்பட 13
பேர் காதலர் தினத்தை கொண்டாட பிப். 13 ல் கொடைக்கானலுக்கு வேனில் சென்றனர்.
கனகராஜ் 40 ஓட்டினார். நேற்று சென்னை செல்ல கொடைக்கானல் - காட்ரோடு வழியாக
திரும்பினர். மதியம் 2:30 மணிக்கு வேன் டம்டம்பாறை வளைவில் பிரேக்
பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச்சுவரை உடைத்து 50 அடி
பள்ளத்தில் கவிழ்ந்தது.பெரும் விபத்து தவிர்ப்பு:பள்ளத்தில் உருண்ட வேன்,
அடர்த்தியான மரத்தில் மோதி நின்றது.
இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. விழுந்த
வேகத்தில் வேனின் கதவு திறந்ததால் ஒவ்வொருவராக வெளியே வந்தனர். வேன்
டிரைவர் உட்பட 14 பேர் காயமடைந்தனர். பெரியகுளம் தீயணைப்பு அலுவலர்
பழனிசாமி தலைமையில் வீரர்கள், போலீசார், அந்த வழியாக வந்த சுற்றுலா
பயணிகளும் காயமடைந்தவர்களை பள்ளத்தில் இறங்கி கயிறு மூலம் மீட்டனர்.
காயமடைந்தவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனை, தேனி மருத்துவக்கல்லுாரி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம்
போக்குவரத்து பாதித்தது. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment