
ஐக்கிய அமீரக விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரத்தின் படத்தை அந்த நாடு முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
விண்வெளி ஆய்வில் அரசு நாடுகளுக்கு பெருமை சோக்கும் வகையில் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள அந்த விண்கலம் புதன்கிழமை எடுத்து அனுப்பியிருந்த அந்த படத்தில், செவ்வாய் கிரகத்தின் வடபுலமும் அந்த கிரகத்தின் மிகப் பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மான்ஸும் இடம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலையில் செலுத்தப்பட்டு, கடந்த 9-ஆம் ஆம் தேதி செவ்வாய் கிரத்தை அடைந்தது. அந்த கிரகத்தை 2 ஆண்டுகள் சுற்றி அந்த விண்கலம் ஆய்வுகள் மேற்கொள்ளும்.
No comments:
Post a Comment