
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் நேற்று விருப்ப மனு தாக்கல் தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதனால் அங்கும் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
திமுக சார்பிலும் கட்சித் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நேற்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதேபோல் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். தியாகராய நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இப்படி ஒரே நாளில் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் சென்னையில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்கு பிறகே நெரிசல் கட்டுக்குள் வந்தது.
No comments:
Post a Comment