
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ் டேக் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஃபாஸ் டேக் இல்லை என்றால் வாகனங்கள் சாலையை சுங்கச்சாவடியை கடக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் ஃபாஸ் டேக் அறிமுகமானது. இதுவரை பணமாக சுங்கச்சாவடியில் செலுத்தி வந்த நிலையில், மின்னணு முறையில் பணத்தை செலுத்தவே இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க ஃபாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலமுறை அவகாசம் கொடுத்த மத்திய அரசு கடைசியாக ஜனவரி 1ஆம் தேதி வரை ஃபாஸ்டேக் பொருத்த கெடு விதித்திருந்தது. ஆனால் அதற்கு பிறகும் பிப்ரவரி 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

ஆனால் இனியும் அவகாசத்தை நீட்டிக்க முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ் டேக் கட்டாயம் என்றும், அப்படி ஃபாஸ் டேக் இல்லாத வாகனம் சுங்கச்சாவடியை கடக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் 720க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. அனைத்திலும் ஃபாஸ் டேக் மூலம் தான் சாலையை கடக்க முடியும்.
ஃபாஸ் டேக் இல்லை என்றால் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008இன் படி இரண்டு மடங்கு கூடுதலாக சுங்கச் சாவடிகள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in
No comments:
Post a Comment